இன்று மாலை 7 மணிக்கு.. நேரலையில் ஹன்சிகா மோத்வானி.. போட்டி போடும் ரசிகர்கள் !

மும்பை : தமிழ் ரசிகர்களின் அமுல் பேபியாக வலம் வரும் ஹன்சிகா மோத்வானி தற்பொழுது ஸ்லிமாக மாறி உள்ள நிலையில் அந்த புகைபடங்களை அவ்வப்போது வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்து வருகிறார்.

இதுவரை போட்டோக்களின் மூலம் நாம் அனைவரும் கண்டு ரசித்து வந்த ஹன்சிகா மோத்வானி முதன்முறையாக சூப்பர் ஷாட் என்ற லைவ் ஷோவில் இன்று தோன்ற இருக்கிறார்.

IHANSIKA என்ற தனது யூடியூப் சேனல் வழியாக ரசிகர்களுக்கு நேரடியாக தரிசனம் கொடுக்கும் ஹன்சிகா, ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கவும் உள்ளார்.

வெற்றி நாயகியாக

வெற்றி நாயகியாக

உலகில் உள்ள மொத்த அழகையும் சேர்த்து பெண்ணாக செய்தவாறு இருக்கும் ஹன்சிகா மோத்வானி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழில் மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் இன்று வரை பல படங்களில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கொழுக் மொழுக்

கொழுக் மொழுக்

தமிழில் அறிமுகமான பெரும்பான்மையான நடிகைகள் தங்களது தோற்றத்தை ஒல்லியாக காட்ட விரும்பி வந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி அதிரடியாக கொழுக் மொழுக் என வந்து நின்று தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் உள்ள ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமில்லாமல் சின்ன குஷ்பு என பெயரும் எடுத்துள்ளார்.

சிம்புடன் காதல்

சிம்புடன் காதல்

எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே, ரோமியோ ஜூலியட் என பல வெற்றி படங்களில் நடித்து வந்த இவர், நடிகர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு வந்த நிலையில் அந்த காதல் சிறிது காலம் மட்டுமே நிலைத்தது.

மிகுந்த ஆர்வத்தில்

மிகுந்த ஆர்வத்தில்

இந்த நிலையில் வெகு வருடங்களாக சிம்புவும் ஹன்சிகாவும் எந்த ஒரு படத்திலும் சேர்ந்து நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மகா என்ற படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர். இதை பார்த்த சிம்பு மற்றும் ஹன்சிகா ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வரும் நிலையில் அந்தப்படத்தின் போஸ்டர் மற்றும் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி வந்தது.

விதவிதமாக போஸ்

விதவிதமாக போஸ்

இந்நிலையில் இவர் தற்போது ஸ்லிம்மான உடம்புடம் பலவகையான போட்டோக்களை பலவிதமான கோணங்களில் விதவிதமாக எடுத்து நான் எப்படி ஸ்லிம் ஆகிட்டேன் பாத்தியா என்றவாறு இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் டுவிட்டர் பக்கத்திலும் அடிக்கடி பதிவுகளை படித்துவிட்டு வந்து அவரின் பாராட்டையும் பெற்று வந்தார்.

Recommended Video

நாடு தான் முக்கியம்... TikTok-ல் இருந்து வெளியேறிய பிக்பாஸ் நடிகை
நேரலையில்

நேரலையில்

படங்களிலும், புகைப்படங்களிலும் காட்சி தந்த ஹன்சிகா தற்போது தனது யூட்யூப் சேனல் வழியாக நேரலையில் ரசிகர்களுக்கு காட்சியளிக்க திட்டமிட்டிருக்கிறார். ஜூன் 25ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு IHANSIKA என்ற தனது யூடியூப் சேனல் வழியாக லைவில் வர இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதை கேள்விபட்ட ரசிகர்கள் நீ நான் என்று போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X