திருமணமானதும் இப்படி பண்ணலாமா?ஹன்சிகா மாமியார் வீட்டில் என்ன வேலை செய்திருக்கார் பாருங்க!

ஜெய்பூர் : நடிகை ஹன்சிகா மோத்வானி மாமியார் வீட்டிற்கு சென்றதும் கணவருக்கு செய்து கொடுத்த ஸ்வீட் தற்போது நகைப்புக்குரியதாகி உள்ளது.

நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக இந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் மாப்பிள்ளை பாடத்தில் நடித்து தமிழ் ஆடியன்சுக்கு பரீச்சீயம் ஆனார்.

அதைத்தொடர்ர்ந்து எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து இளசுகள் மனதில் இடம் பிடித்தார். கொழு கொழுனு இருந்த ஹன்சிகாவை ரசிகர் சின்ன குஷ்பு என செல்லமாக அழைத்து வந்தனர்.

ஹன்சிகா மோத்வானி திருமணம்

ஹன்சிகா மோத்வானி திருமணம்

நடிகை ஹன்சிகா மோத்வானி காதல் நகரமான பாரிஸில் ஈபிள் கோபுரத்தின் முன் தனது நீண்ட நாள் நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக போட்டோவை பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு அறிவித்தார். இதையடுத்து, ஹன்சிகா மற்றும் சோஹேல் திருமணம் ஜெய்ப்பூரில் பழமைவாய்ந்த அரண்மனையில் கோலாகலமாக நடந்தது.

தடபுடலாக நடந்த திருமணம்

தடபுடலாக நடந்த திருமணம்

ஹன்சிகா மோத்வானியை சோஹேல் கதுரியா சிந்தி பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டார். நடிகை ஹன்சிகா திருமணத்திற்காக சிவப்பு நிற லெஹங்கா அணிந்திருந்தார். அதே போல சோஹேலும் தங்க நிறத்தில் ஷெர்வானி அணிந்திருந்தார். இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் வெளியானது.

ஆனந்த கண்ணீர்

ஆனந்த கண்ணீர்

திருமண விழாவில் முக்கியமான சடங்கான நெற்றியில் குங்குமம் வைக்கும் சடங்கின் போது, மகிழ்ச்சியில் ஹன்சிகா ஆனந்த கண்ணீர் வடித்தார். இவர்களின் திருமணம் நடைபெறும் போது வாணவேடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ஹன்சிகாவும் சோஹேலும் கணவன் மனைவியாக திருமண பந்தத்தில் இணைந்தனர்.

கிண்டலடிக்கும் பேன்ஸ்

கிண்டலடிக்கும் பேன்ஸ்

திருமணம் முடிந்த கையோடு மாமியார் வீட்டுக்கு சென்ற ஹன்சிகா காதல் கணவருக்காக முதல் முறையாக சமையலறையில் அல்வா செய்துள்ளார். அதை சாப்பிட்ட சோஹைல் கதுரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஹன்சிகா கையில் அல்வாவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து "பெஹ்லி ரசோய்"என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹன்சிகா மீது அன்பு மழை பொழிந்து வருகின்றனர். இருந்தாலும், சில ரசிகர்கள் திருமணமானதுமே கணவருக்கு அல்வாவா என கிண்டலாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X