என்னா.. ஹன்சிகாவுக்கு இடுப்பு வலியா.. போட்டோவை பார்த்து நக்கலடித்த ரசிகர்!

சென்னை : புது புது போட்டோக்களுடன் பளபளவென இருக்கும் ஹன்சிகா மோத்வானியின் மனதை கொள்ளை கொள்ளும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது

இப்போது வெள்ளை நிற டாப்ஸ் அணிந்து சும்மா டிப்டாப்பாக இவர் வெளியிட்ட ஒரு போட்டோ ஒன்று அனைவரையும் கவர்ந்து வருகிறது.

அதில் தனது ஸ்லிம்மான தேகத்தை காட்டியவாறு ரொமாண்டிக் லுக் விடும் அந்த போட்டோவிற்கு லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

மயக்க வைக்கும் போட்டோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நம்மை ஆச்சரியப்படுத்தி வரும் இவர் தற்போது இடுப்பில் கை வைத்தவாறு கிக் ஏற்றும் லுக்கில் இவர் பகிர்ந்த ஒரு போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த ஆஷமான போட்டோவை பார்த்து பலர் ஜொள்ளுவிட்டு வரும் வேலையில், சிலர் நாங்கள் நெய் குழந்தை போல உள்ள கொழு கொழு ஹன்சிகாவை ரொம்ப மிஸ் பண்ணுகிறோம் என தங்களது ஃபீலிங்சை தெரிவித்து வருகின்றனர்.

இடுப்பு வலியா

இடுப்பு வலியா

தனது உடல் எடையை குறைத்துள்ள இவர் தற்போது ஸ்லிம்மான தேகத்துடன் பல போட்டோக்களை விதவிதமாக பகிர்ந்து கொண்டு வருகிறார். அதை சில ரசிகர்கள் ரசித்து வரும் வேளையில், பலர் இவரை எங்களுக்கு சப்பி ஹன்சிகாவை தான் பிடிக்கும் நீங்கள் மீண்டும் சப்பியாகவே வாங்க என பல நாட்களாக இவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இப்படி தங்களது கோரிக்கைகளை வைத்து வரும் ரசிகர்கள் மத்தியில் சிலர் என்ன ஹன்சிகாவுக்கு இடுப்பு வலியா என இந்த போட்டோவை பார்த்து கேலி செய்து கலாய்த்து வருகின்றனர்.

மிகுந்த ஏக்கத்துடன்

மிகுந்த ஏக்கத்துடன்

இன்னும் சிலர் நீங்கள் உடல் எடையைக் குறைத்த பின் பார்க்க 12 வகுப்பு படிக்கும் ஸ்கூல் பொண்ணு மாதிரி இருக்கீங்க என உண்மையையும் சொல்லி வருகின்றனர். இப்படி தனது உடலின் மீது அதிக கவனம் செலுத்த வரும் ஹன்சிகாவின் படங்கள் சமீப காலங்களில் அதிகமாக வெளிவராததால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஏக்கத்துடன் உங்களை திரையில் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டது. உங்களது படங்களை மீண்டும் திரையில் பார்க்க நாங்கள் ஆசைப்படுகிறோம் என கேட்டு வரும் ரசிகர்களுக்கு அவர் கொடுக்கும் பதிலாக "மகா" சீக்கிரமே வெளிவரும் என்பது தான் நம்பிக்கை.

கடலுக்கு நடுவே

கடலுக்கு நடுவே

சிம்புவுடன் மகா என்ற படத்தில் நடித்து வரும் இவர் அதில் கடலுக்கு நடுவே ஒரு கப்பலில் இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோ காட்சிகள் சமீபத்தில் வெளியில் வந்த நிலையில் அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங்கில் உள்ளனர். வாலு படத்தின் போதே இவர்கள் இருவருக்கும் காதலில் விழுந்து பின்னர் அது கைகூடாமல் போனார்கள் என்றும் பலரும் சொல்ல நாம் கேள்வி பட்டு இருப்போம். பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு இவர்கள் இணையும் ஒரு படமாக இது இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடிவருகிறது.

சயின்டிபிக் படம்

சயின்டிபிக் படம்

மகா படத்தை தொடர்ந்து இவர் தமிழில் நடித்து வரும் படம் " பார்ட்னர் " இந்த படத்தில் ஆதியுடன் முதன்முதலாக இவர் இணைய உள்ளார். இது முற்றிலும் ஒரு சயின்டிபிக் சம்பந்தப்பட்ட படம் என சொல்லப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தை மனோஜ் தாமோதரன் இயக்கிவருகிறார். ஹன்சிகாவிற்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் எப்போதும் செயல் பட்டு வருகிறது. இவரது இன்ஸ்டா மற்றும் இல்லாமல் தனியாக யூ டூயூப் சேனல் வேலைகள் தினமும் நிறையவே நடக்கிறது. இவை எல்லாம் கடந்து நல்ல படங்கள் மீண்டும் நிறைய நடிப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X