Hansika Motwani: ஹன்சிகாவின் பிரமாண்டமான வீடு.. சிம்பிளாக நடைபெற்ற கிரகபிரவேசம்.. இத்தனை கோடிகளா?

மும்பை: நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவராக இருந்தார். இவரை சின்ன குஷ்பு என்றே பலரும் கூறி கொண்டாடி வந்தனர். தனது முதல் படத்தில் இருந்தே நல்ல ஹிட் படங்களில் அங்கம் வகித்த ஹன்சிகாவின் மார்கெட் தொடர்ந்து ஏறிய வண்ணம் இருந்தது. ஹன்சிகாவின் அழகே அவர் கொஞ்சம் குண்டாக இருந்ததுதான் என பல ரசிகர்கள் இப்போதும் கூறுவார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு, ஹன்சிகா வெளிநாட்டிற்குச் சென்று தனது உடலைக் குறைக்க சிகிச்சை எடுத்தார். அதன் பின்னர் ஹன்சிகாவைப் பார்த்தால் இதுவா ஹன்சிகா என கேட்க வைக்கும் அளவிற்கு மிகவும் மெலிந்து போய் வந்தார். இந்நிலையில் அவர் தற்போது தனது புதிய வீட்டில் கிரக பிரவேஷம் நடத்தியுள்ள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

hansika motwani hansika griha pravesh

நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தவர் பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த எங்கேயும் காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் நடித்தபோது அவருக்கு வயது 17தான். இந்தப் படத்தில் சிறப்பான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து படம் ஹிட் அடிக்க காரணமாகவும் இருந்தார். இவருக்கும் ஜெயம் ரவிக்கும் இடையிலான காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுமட்டும் இல்லாமல் படம் இன்றைக்கும் எவர் க்ரீன் படமாக உள்ளது.

hansika motwani hansika griha pravesh

இந்தப் படத்திற்குப் பின்னர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார் ஹன்சிகா. குறிப்பாக விஜய், சிம்பு, தனுஷ் உள்ளிட்டவர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார். இவர் நடித்தப் படங்கள் செம ஹிட் ஆனதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருந்தது. ஆனாலும் நடனத்தில் இவரால் பெரிய அளவில் ஸ்கோர் செய்யமுடியவில்லை என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் இவர் முறைப்படி நடனப்பயிற்சி பெற்றவர் ஆவார்.

hansika motwani hansika griha pravesh

சிகிச்சை: இவரால் நடனத்தில் பெரிய அளவில் ஈடுபடமுடியாமல் போதற்கு காரணம் அவரது உடல் பருமன் எனக் கூறப்பட்டது. இதனால் வெளிநாட்டிற்குச் சென்று தனது உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை பெற்றார். அந்த சிகிச்சைக்குப் பின்னர், அவரது உடல் பருமன் குறைந்து முற்றிலுமாக அடையாளமே தெரியாத அளவிற்கு மெலிந்து போய் வந்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

hansika motwani hansika griha pravesh

புது வீடு: தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இவரை தங்களது படங்களில் கமிட் செய்ய ரொம்பவே யோசித்தனர். இதனால் இவரது மார்க்கெட் அப்படியே சரியத் தொடங்கியது. தற்போது இவரது வசம் படங்கள் இருக்கின்றதா என்பதே சந்தேகம்தான். அப்படியான நிலைக்கு இவர் வந்துவிட்டார். இந்நிலையில் இவர் தற்போது தனது புதிய வீட்டின் கிரகபிரவேசத்தை நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

hansika motwani hansika griha pravesh

கிரகபிரவேசம்: அந்தப் புகைப்படங்களில் அவரும் அவர் கணவர் சோஹைல் கட்டூரியாவும் ஒரே நேரத்தில் வீட்டிற்குள் கால் எடுத்து வைக்கின்றனர். இதுமட்டும் இல்லாமல் வீட்டிற்குள் யாகம் வளர்த்து கிரகப்பிரவேசம் செய்துள்ளனர். அப்போது இருவரும் யாகத்தின் முன் அமர்ந்துள்ளனர். மேலும் வீட்டிற்குள் வரும்போது ஹன்சிகா தனது தலையில் கலசத்தை வைத்துக் கொண்டு உள்ளே நுழைகின்றார். இந்த கிரகபிரவேசப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புது வீட்டின் மொத்த மதிப்பு எப்படியும் பல கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது. இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்களுக்கு நியூ பிகின்ஸ் அதாவது புதிய தொடக்கம் என கேப்ஷன் இட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X