லாக்டவுன் மூட்... இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்திய ஹன்ஸ்... அவ்ளோ கடுப்பாவா இருக்கு?
சென்னை : லாக்டவுன் காரணமாக அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
திரைத்துறையிலும் படப்பிடிப்புகள் நடக்காததால் நடிகர், நடிகைகள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
அவர்கள் என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர். ஒருகட்டத்தில் வெறுப்பாகி போன நடிகை ஹன்சிகா செய்த செயலை பாருங்கள்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா ஏற்படுத்தும் பாதிப்புகள் இந்திய அளவில் அதிகமாக காணப்படுகிறது. இதிலிருந்து மக்களை காக்கும்வகையில் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

முக்கிய அறிவுறுத்தல்கள்
மேலும் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியில் சுற்றக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் எப்போதும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் மாஸ்க் அணியவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Recommended Video

திரைத்துறையினரும் முடக்கம்
இந்நிலையில் முழு லாக்டவுன் காரணமாக அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். திரைத்துறையினரும் படப்பிடிப்புகள் இன்றி தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். நடிகர், நடிகைகள் அவ்வப்போது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
கடுப்பான ஹன்சிகா
இந்நிலையில் நடிகை ஹன்சிகா, தான் லாக்டவுனால் எந்த அளவிற்கு கடுப்பாகியுள்ளார் என்பதை தனது இன்ஸ்டாவில் சிறிய வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு லாக்டவுன் மூட் என்றும் கேப்ஷன் வெளியிட்டுள்ளார். வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் கடுப்பு அதில் நன்றாக தெரிகிறது. என்ன செய்ய?


Click it and Unblock the Notifications











