ஹன்சிகா அண்ணன் திருமணம்... சூப்பர் உடையில் கலக்கிய ஹன்ஸ்... வீடியோ வெளியீடு

உதய்ப்பூர் : நடிகை ஹன்சிகா மோத்வானியின் அண்ணனின் திருமணம் உதய்ப்பூரின் தி ராயல் ரிட்ரீட் ஹோட்டலில் கடந்த மாதத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து தற்போது ஹன்சிகா யூடியூபில் வெளியிட்டுள்ளார்.

சிறப்பான உடையில் மணமகளுக்கு இணையான மேக்கப்பில் ஹன்சிகா இந்த திருமணத்தில் ஜொலித்தார்.

சின்ன குஷ்பூ

சின்ன குஷ்பூ

நடிகை ஹன்சிகா தென்னிந்திய மொழி படங்களில் சிறப்பான கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்றவர். சின்ன குஷ்பூ என்று போற்றப்பட்டவர். கவர்ச்சியானாலும் கேரக்டரானாலும் பின்னி எடுத்து வருபவர். ஆரம்பத்தில் குண்டாக காட்சியளித்த இவர், தொடர்ந்து தன்னை மிகவும் பிட்டாக மாற்றிக் கொண்டுள்ளார்.

பிரம்மாண்ட திருமணம்

பிரம்மாண்ட திருமணம்

இவரது சகோதரரின் திருமணம் உதய்ப்பூரின் தி ராயல் ரீட்ரீட் ஹோட்டலில் கடந்த மாதத்தில் நடைபெற்றது. திரை பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் சூழ இந்த திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், ஹால்டி, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளின் வீடியோவை தற்போது ஹன்சிகா யூடியூபில் வெளியிட்டுள்ளார்.

மயக்கும் வீடியோ

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த லிங்கையும் ஷேர் செய்துள்ளார். துவக்கம் முதல் இந்த வீடியோவில் தன்னுடைய மேக்கப், உடையலங்காரம் உள்ளிட்ட அனைத்தையும் பகிர்ந்துள்ளார். அவருடைய சேட்டைகள் இந்த வீடியோவில் ரசிகர்களின் மனதை மயக்கும்வகையில் அமைந்துள்ளது.

குத்தாட்டம் போட்ட ஹன்ஸ்

குத்தாட்டம் போட்ட ஹன்ஸ்

திருமணத்தின்போது மணமகளுக்கு இணையான உடை மற்றும் மேக்கப்பில் கலக்கியுள்ளார் ஹன்சிகா. மேலும் திருமணத்தின்போது இவர் போடும் குத்தாட்டமும் அனைவரையும் கவரும்வகையில் அமைந்துள்ளது. மொத்தத்தில் ஹன்ஸ் நடிப்பில் சமீபத்தில் எந்த திரைப்படமும் வெளிவராத நிலையில், இது அவரது ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X