அசிங்கமா பேசிய விஜய் ரசிகர்.. நாய் என பதிலடி கொடுத்த பிக்பாஸ் நடிகை.. ரணகளமாகும் டிவிட்டர்!

சென்னை: தன்னை கெட்ட வார்த்தையால் திட்டிய விஜய் ரசிகரை கூலாக டீல் செய்த நடிகை ஆர்த்தி அவரை நாய் என திட்டியிருக்கிறார்.

Recommended Video

Vijay ரசிகரை அசிங்க படுத்திய நடிகை ஆர்த்தி | Actress Harathi

நடிகை ஆர்த்தி குண்டு ஆர்த்தி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். நகைச்சுவை நடிகையான ஆர்த்தி தனுஷ், விக்ரம், விஷால், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் அப்போது சக போட்டியாளரான ஜூலியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் 21வது நாளே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

என்ன தவம் செய்தேனோ

என்ன தவம் செய்தேனோ

அதன் பிறகு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஆர்த்திக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு என்ன தவம் செய்தேனோ என்ற படத்தில் நடித்தார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஆர்த்தி அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

டிவிட்டரில் ஆக்டிவ்

டிவிட்டரில் ஆக்டிவ்

மேலும் பிறந்த நாள் கொண்டாடும் சக நடிகை நடிகர்களுக்கு வாழ்த்து கூறுவது, ஆட்டம் பாட்டம் என வீட்டில் குவாரண்டைன் நேரத்தை செலவழிக்கும் வீடியோக்களை வெளியிடுவது என இருந்து வருகிறார். அஜித் ரசிகையான ஆர்த்தி அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல போஸ்ட்க்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் ஆர்த்தி, ஸ்ரீரெட்டி, யாஷிகா ஆனந்த் ஆகியோருக்கு கொச்சையாக பட்டப் பெயர் வைத்ததோடு கெட்ட வார்த்தையாலும் திட்டியிருக்கிறார். மேலும் இவர்கள் எல்லாம் விஜய்க்கு ரசிகையாக இல்லாமல் இருப்பதே நல்லது என பதிவிட்டார்.

கூல் டீலிங்

கூல் டீலிங்

அதனை பார்த்த நடிகை ஆர்த்தி அவரை கூலாக டீல் செய்ததோடு போறப்போக்கில் நாய் என்றும் திட்டியிருக்கிறார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தம்பி என்ன வேனா சொல்லுபா அது உன் தரம்... ஆனா உன்புகைப்படத்துடன் உன் உண்மையான பெயருடன் சொல் அதுதான் ஆண்மகனுக்கழகு... நம்ம தளபதியும் அதைத்தான் விரும்புவார்... இல்லையேனில் பெளர்ணமி நிலவைப்பார்த்து ஏதோ குரைக்கிறது என்றாகும்.. என பதிவிட்டுள்ளார்.

ஒரு சில களைகள்

ஒரு சில களைகள்

அவரது இந்த பதிவை நடிகை காஜல் லைக் செய்திருக்கிறார். ஆர்த்தியின் இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அஜித் ரசிகரின் டிவிட்டுக்கு பதில் கூறியுள்ள ஆர்த்தி இந்த மாதிரி ஒரு சில களைகளை பிடுங்கி எறிந்து விட்டால் மற்ற ரசிக சகோதர சகோதரிகள் தளபதியின் கோட்டைக்கு தூண்களே.. உண்மையிலேயே தளபதி தமிழகத்தின் செல்லபிள்ளையே.. இவர்கள் அவர் பெயர் கெடுக்காமல் இருப்பின் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X