சிவசங்கர் பாபா.. செருப்பால் துடைப்பத்தால் அடிக்க போலீஸ் அனுமதிக்க வேண்டும்.. பிரபல நடிகை ஆவேசம்!

சென்னை: பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபாவை செருப்பாலும் துடைப்பத்தாலும் அடிக்க போலீசார் அனுமதிக்க வேண்டும் என பிரபல நடிகை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சாமியார் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி இயங்கி வருகிறது.

பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடிபட்டதாக புகார்கள் எழுந்தன.

உத்ரகாண்டில் சிகிச்சை

உத்ரகாண்டில் சிகிச்சை

இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்ய அவரது இருப்பிடத்திற்கு விரைந்தனர் போலீசார். ஆனால் அவர் உத்தரகாண்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

போக்சோ வழக்கு

போக்சோ வழக்கு

இதனிடையே அவர் மீது புகார்கள் குவியத் தொடங்கின.

அவருக்கு எதிரான புகார்கள் அதிகரிக்கவே, சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சி.பி.சி.ஐ.டி பிரிவு விசாரணையைத் தொடங்கியது.

ஓட்டம் பிடித்த சிவசங்கர் பாபா

ஓட்டம் பிடித்த சிவசங்கர் பாபா

மேலும் சிவசங்கர் பாபாவை தேடி தமிழக காவல்துறை உத்தரகாண்ட் சென்றது. ஆனால் சிவசங்கர் பாபா, போலீஸ் வருவதை அறிந்து அங்கிருந்து எஸ்கேப்பானார். போலீஸ் சிவசங்கர் பாபாவை கைது செய்ய தீவிரமாக இருந்த நிலையில் நேற்று சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

இன்று சென்னை கொண்டு வரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவசங்கர் பாபாவை செருப்பாலும் துடைப்பத்தாலும் அடிக்க அனுமதிக்க வேண்டும் என பிரபல நடிகையான ஆர்த்தி ஆவேசமாக கூறியுள்ளார்.

ஆர்த்தி விளாசல்

ஆர்த்தி விளாசல்

தமிழ் சினிமாவில் பிரபலமான துணை நடிகைகளில் ஒருவர் ஆர்த்தி. படங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்து வரும் ஆர்த்தி, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் ஆர்த்தி, பாபாவை விளாசியுள்ளார்.

செருப்பால் அடிக்கிறோம்

செருப்பால் அடிக்கிறோம்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, தமிழக காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். மன்னிக்கவும் அந்த எச்ச சாமியார இரண்டு நாள் பொது இடத்தில் நிக்க வையுங்கள் அவனால் பாதிக்கப்பட்டவர்கள் வளர்ந்த குழந்தைகள் ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் 9am- 5pm வரை செருப்பால துடைப்பத்தால் அடிக்கிறோம்.. பிறகு உங்கள் சட்டம் தன் கடமையை செய்யட்டும்" இவ்வாறு நடிகை ஆர்த்தி பதிவிட்டுள்ளார்.

குவியும் கமெண்ட்

குவியும் கமெண்ட்

அவரது இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் பல நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களையும் ஆர்த்தியின் பதிவுக்கு கமெண்ட்டாக தெரிவித்து வருகின்றனர்.

காரித்துப்பணும்

காரித்துப்பணும்

நடிகை ஆர்த்தி தனது மற்றொரு பதிவில், பாடகியின் மகளை பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்திய பாதிரியாரை மீடியாக்கள் காட்ட மறுப்பதேன்?? பாலியல் தொல்லை கொடுப்பவர்களை பிரித்துப் பார்க்காமல் மிகக் கடுமையான தண்டனை கொடுத்து விளம்பரப் படுத்துங்கள் இனிமே பார்ப்பவர்கள் காரித்துபணும் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X