மூக்கு பொடப்பா இருந்தா இப்டிலாம் யோசிக்க தோனுமோ.. ஜோக் சொன்ன ஆர்த்தி.. பங்கம் செய்த நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை ஆர்த்தி டிவிட்டரில் கூறியிருக்கும் ஜோக்கை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
நடிகை ஆர்த்தி பிரபல நகைச்சுவை நடிகை ஆவார். பல நடிகைகளுடனும் தோழியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
சினிமா மட்டுமின்றி பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் நடிகை ஆர்த்தி. தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டில் உள்ள ஆர்த்தி தனது கணவருடன் சேர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஒரு ரூபாய் சம்பளம்
அண்மையில் இந்த ஆண்டு முழுவதும் தான் நடிக்கும் படங்களுக்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குவேன் என கூறி ஒரு வீடியோவை வெளியிட்டார். இதனால் பலரின் பாராட்டுக்களை பெற்றார் நடிகை ஆர்த்தி.

மாஸ்கோடவாமா
இந்நிலையில் இன்று ஒரு ஜோக்கை ஷேர் செய்திருக்கிறார் நடிகை ஆர்த்தி. அதாவது, வாஸ்கோடகாமா இன்னிக்கு இந்தியா வந்தா அவர்கிட்ட என்ன சொல்வாங்க???
"மாஸ்கோட வாமா!" இப்படி ஒரு ஜோக்கை ஷேர் செய்துள்ளார் ஆர்த்தி.

மூக்கு பொடப்பா இருந்தா..
ஆர்த்தியின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள், முடியல என்றும், செம பஞ்ச் என்றும் கிண்டலடித்துள்ளனர். மேலும் சிலர் எக்கோ, மூக்கு பொடப்பா இருந்தா இப்டிலாம் யோசிக்க தோனும்.. என்றும் அவரை கலாய்த்திருக்கின்றனர்.

14 நாட்கள் தனியாகத்தான்..
மேலும் சில நெட்டிசன்கள், இப்போது எதுக்கு வாஸ்கோடகாமா நான் ஏன்டா இன்னைக்கு வரபோறேன் என கேட்பது போல் கேட்டு பங்கம் செய்துள்ளனர். வாஸ்கோடகாமா வந்தால் 14 நாட்கள் தனியாகத்தான் இருக்க வேண்டும் என்று சிலர் சீரியஸாக பதில் சொல்லியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











