அடேய் அரைவேக்காட்டு முட்டா பயலே.. நெட்டிசனை சரமாரியாக திட்டி தீர்த்த நடிகை ஆர்த்தி!

சென்னை: வரம்பு மீறி பேசிய நெட்டிசனை அவனே இவனே என சரமாரியாக விளாசியுள்ளார் நடிகை ஆர்த்தி.

கோலிவுட்டில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஆர்த்தி. விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் ஆர்த்தி. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிரபலங்கள் பலரும் ஹிந்தி தெரியாது போடா, ஐ அம் எ தமிழ் பேசும் இந்தியன் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற டி ஷர்ட்டுகளை அணிந்து போஸ் கொடுத்து வருகின்றனர்.

ஆர்த்தி டிவிட்

ஆர்த்தி டிவிட்

அதேநேரத்தில் சில பிரபலங்கள் இந்தி மொழிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விருப்பமுள்ளவர்கள் விரும்பிய மொழிகளை படிக்கலாம் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஆர்த்தி இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

பிரபலங்கள் ஜாக்கிரதை

பிரபலங்கள் ஜாக்கிரதை

அதாவது, நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு. பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்.
ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும் பிறந்திருக்கு. அதனால பழிப்பது தவறு விரும்பினால் படிப்போம். இந்தி பட வாய்ப்பு வந்தால் டிஷர்ட்டை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரதை என பதிவிட்டிருந்தார்.

வரம்பு மீறி பேசி

வரம்பு மீறி பேசி

அதனை பார்த்த நெட்டிசன் ஒருவர், கலைக்கு மொழி இல்ல மூதேவி, பயிற்று /அதிகார மொழியாக வர கூடாதுனு தான் பேச்சு இங்க.. அரைவேக்காடு என்று வரம்பு மீறி பேசினார்.

போடா அங்கிட்டு

போடா அங்கிட்டு

அதனை பார்த்து கடுப்பான நடிகை ஆர்த்தி அவரை சாமாரியாக திட்டி தீர்த்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டில், அடேய் அரவேக்காட்டு முட்டா பயலே பயிற்று /அதிகார மொழியா ஆங்கிலம் இருக்கே அது மட்டும் உனக்கு இனிக்குதோ?? இந்தி மட்டும் எதிர்க்கிற உன்ன மாதிரி காண்டு படிச்சவன் எண்ணம் ஈடேராது.. போடா அங்கிட்டு என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X