Pandian stores 2 serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் நானா.. விளக்கம் கொடுத்த ஹேமா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் நிறைவடையவுள்ளது.
இந்தத் தொடரின் அடுத்த சீசன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.

அந்த வகையில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் விரைவில் அதே நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் குறித்து ஹேமா ராஜ்குமார் விளக்கம்: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது. இதன் இறுதிக்கட்ட எபிசோட்களை ரசிகர்கள் தற்போது கண்டுகளித்து வருகின்றனர். தன்னுடைய மாமனார் ஜனார்த்தனனை கத்தியால் குத்திய சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பிரஷாந்தை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிகழ்வில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமான ஜனார்த்தனர், தன்னுடைய முந்தைய நடவடிக்கைகளை நினைத்து வருந்துவதாக காட்டப்பட்டுள்ளது.
நேற்றைய எபிசோடில் மீனா -ஜீவா தம்பதியின் குழந்தைக்கு பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்ப்டட நிலையில், இந்த விழாவிற்கு வந்த ஜனார்த்தனன் அவரது மனைவி மற்றும் முல்லையின் அம்மா பார்வதி, தனத்தின் அம்மா உள்ளிட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. இதனால் விழா, வழக்கம்போல சோகத்தில் முடிந்தது. இதையடுத்து, பார்வதி தன்னை பேசியதில் தவறில்லை என்று ஜனார்த்தனன் ஜீவாவிடம் வருத்தத்தை தெரிவிப்பதாக நேற்றைய எபிசோட் காணப்பட்டது.

இன்னும் சில தினங்களில் இந்தத் தொடர் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த சீசனுக்கான அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி தன்னுடைய சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டு வருகிறது. இந்தத் தொடர் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகவுள்ளது. முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைந்த நிலையில், இரண்டாவது சீசனில் தந்தை -மகன்கள் பாசம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது சீசனில் தனமாக நடிகை நிரோஷா நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த தொடரில் முதல் சீசனில் மீனாவாக கலக்கல் பர்பார்மென்ஸ் கொடுத்துவரும் ஹேமா ராஜ்குமாரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இதனிடையே இந்த தகவல் குறித்து ஹேமா தற்போது விளக்கம் அளித்துள்ளார். இன்னும் எதுவும் உறுதியாகவில்லை என்றும், நடந்தால் நானே அறிவிக்கிறேன் என்றும் அவர் சமூகவலைதளத்தில் கூறியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நான்கு அண்ணன் -தம்பிகளை மையமாக வைத்து கதைக்களம் அமைந்திருந்த நிலையில், தன்னுடைய துருதுரு நடிப்பால் ஜீவாவின் மனைவி மீனாவாக, அந்த கேரக்டருக்கு சிறப்பான ஷேப்பை கொடுத்திருந்தார் ஹேமா. கோபமாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் அதை உடனடியாக வெளிப்படுத்தும் அவரது கேரக்டர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்நிலையில் அவர் இரண்டாவது சீசனிலும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











