உங்களால் அம்மாவை பறிகொடுத்துவிட்டேன்.. மனச்சாட்சியே இல்லையா? கதறும் நடிகை!
சென்னை: தெலுங்கு நடிகை ஹேமா கொல்லா, சமூக வலைத்தளங்களில் தன்னைத் தொடர்ந்து கேலி செய்தும், மோசமான வார்த்தையால் கமெண்டுகளை பதிவிடுபவர்களை கடுமையாக கண்டித்தார். என் தாய் மறைந்த சோகத்தில் இருந்தே நான் இன்னும் மீண்டு வரவில்லை, இந்த நேரத்தில் இந்த கேலி கிண்டல்கள் தன்னை மிகவும் பாதிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹேமா கொல்லாவின் தாயார் லலிதகுமாரி கடந்த 20ந் தேதி காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வீட்டிலேயே வைக்கப்பட்டு பன்சாரகுட்டாவில் உள்ள மகபிரஸ்தானம் மயானத்தில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. ஹேமா கொல்லா தாயை இழந்து தவித்து வரும் நேரத்தில், சிலர், இணையவாசிகள், நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதிர்மறையான கருத்துக்களையும், கேலி செய்யும் பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

நடிகை ஹேமா கொல்லா: இந்த மோசமான பதிவுகளால் மனமுடைந்து போன ஹேமா கொல்லா வெளியிட்ட பதிவில், என்னுடைய அம்மா இறந்துவிட்டார். இதுக்கு மேல உங்களும் உங்களின் வன்மம் அடங்கவில்லையா? இனிமேல் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள்.என் அம்மா இறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. இந்த நேரத்தில் கூட நீங்கள் என்னைப் பற்றி அவதூறாகப் பேசுகிறீர்களே, நீங்கள் மனிதர்கள் தானா? "ஒவ்வொரு நாளும் என்னைப் பற்றிய தவறான செய்திகளை பரப்பி, எனக்கு மன உளைச்சலைக் கொடுத்தீர்கள். எனக்குப் பதிலளிக்கவோ, என்னுடைய நியாயத்தைச் சொல்லவோ நேரம் இல்லை. என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்துவிட்டு, ஒரு சில சேனல்கள் என்னைப்பற்றி தவறான தகவல்களை வெளியிட்டார்கள். அதை நம்பி பலர் என்னை மோசமாகப் பேசுகிறார்கள்.
மனச்சாட்சியே இல்லையா: ஒரு பெண்ணைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பும் போது, அது அவர்களுடைய குடும்பத்தையும், பிள்ளைகளையும் எவ்வாறு பாதிக்கும் என்று ஏன் யோசிக்கவில்லை? கர்நாடக உயர் நீதிமன்றம் நவம்பர் 3 ஆம் தேதி என் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது. ஆனால், சமூக ஊடகங்களில் பரவிய டிரோல்கள் மற்றும் வதந்திகளால் என் அம்மா உடைந்து போனார். அது அவரது உடல்நிலையை கடுமையாக பாதித்தது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று பலமுறை கூறியும் யாரும் கேட்கவில்லை. நான் இப்போது வழக்கில் வெற்றி பெற்றுவிட்டேன், ஆனால் என் அம்மா இப்போது என்னுடன் இல்லை. என்னை பற்றி பரவிய போலிச் செய்திகளைக் தாங்குக்கொள்ள முடியாமல் என அம்மா மன உளைச்சலுக்கு ஆளாகி இறந்துவிட்டார். போலிச் செய்திகளை பரப்பியவர்கள் என் அம்மாவை திருப்பி தர முடியுமா?
இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது. தயவுசெய்து எனது நிலைமையைப் புரிந்து கொள்ளுங்கள். நான் என்னுடைய அம்மாவுக்காக அழுவதற்குக் கூட எனக்கு நேரம் இல்லை என ஆதங்கத்துடன் பேசி உள்ளார். யாரை பற்றி எதுவுமே தெரியாமல் போலி செய்து வெளியிடுபவர்கள், கேலி கிண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நடிகை ஹேமா கொல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். பெங்களுரில் கடந்த ஆண்டு நடந்த 'ரேவ் பார்ட்டி'யில் போதை பொருள் பயன்படுத்தியதாக தெலுங்கு நடிகை ஹேமா கைது செய்யப்பட்டார். ஆனால், அவரின் உடலில் போதைப்பொருள் எதுவும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











