பாலியல் தொல்லை.. பெண்மை குறித்து ஆபாச கமெண்ட்.. செம்மனூர் நகைக்கடை அதிபர் மீது நடிகை புகார்!
சென்னை: தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையான ஹனி ரோஸ். பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி, மோகன்லாலின் மான்ஸ்டர் என பல படங்களில் நடித்துள்ளார். இவர், செம்மனூர் நகைக்கடை அதிபர் பாபி மீது எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இந்தியாவின் நீதித்துறையின் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், கண்ணூர் அலகோட்டில் செம்மனூர் நகைக்கடை திறப்பு விழா ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெற்றது. அந்த நகை கடையின் அதிபர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அதன் பிறகு அவரது வேறொரு கடை திறப்பு விழாவுக்கு என்னை அழைத்த போது நான், அதில் கலந்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டேன். அதன் பிறகு தொடர்ந்து என்னை வற்புறுத்தி அழைத்தும் நான் வர முடியாது என்று மறுத்துவிட்டேன். இதனால், சமூக வலைதளங்களில் என்னை ஆபாசமாக சித்தரித்து, இரட்டை அர்த்தத்தில் என் பெண்மை குறித்து மிகவும் மோசமான கருத்துக்களை அவரின் கூட்டாளிகள் வெளியிட்டு வருகின்றனர். நடிகை அளித்த புகாரின் பேரின் பேரில் செம்மனூர் அதிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உறுதியாக இருக்கிறேன்: செம்மனூர் அதிபர் மீதும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பத்தில் உறுதியாக இருக்கிறேன். இப்போது உங்கள் மீது புகார் அளித்து இருக்கிறேன். அதே போல, உங்களின் கூட்டாளிகள் மீதும் விரைவில் புகார்கள் அளிப்பேன். நீங்கள் உங்களுக்கு இருக்கும் செல்வாக்கு, பண பலத்தை நம்பலாம். ஆனால், நான் இந்தியாவின் நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறேன். இது எனக்கு நிச்சயம் நியாயத்தை கொடுக்கும் என ஹனி ரோஸ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஒருவர் கைது: முன்னதாக நடிகை ஹனி ரோஸ், ஜனவரி 5ந் தேதி இரட்டை அர்த்தத்துடன் அவதூறான கருத்துக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 30 பேர் மீது எர்ணாகுளம் மத்திய காவல்நிலையத்தில் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்திருந்தார். மேலும், அந்த வழக்கிற்கு ஆதாரமாக அவர்கள், பதிவிட்ட ஸ்கிரீன் ஷாட்களை சமர்ப்பித்து இருந்தார். இந்த வழக்கில்,ஹனி ரோஸ் குறித்து தகாத முறையில் கருத்துக்களை பதிவிட்ட அந்த கும்பலத்தைச் சேர்ந்த ஷாஜி என்ற நபர் போலீசாரால் ஜனவரி 6ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications











