ரஜினி பட நடிகை கடற்கரையில் மேல் சட்டை இல்லாமல் காத்து வாங்கும் போட்டோ வைரலாகி வருகிறது..
மும்பை : தமிழ் மக்களுக்கு ரஜினிகாந்த் நடித்த காலா என்ற படத்தின் மூலம் ஜெரினாவாக அறிமுகமாகிய இவர் ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஹியூமா குரேஷி
சூப்பர் ஸ்டார் ஜோடியாக சேலையில் மிகவும் அடக்கமாக நாம் பார்த்த இவர் தற்போது சமூக வலைதளங்களில் மேல் சட்டை இல்லாமல் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவ்வாறு இவர் டுவிட்டரில் பதிவிட்ட ஹாட்டான பீச் போட்டோ ஒன்று அனைவராலும் கவரப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

பெஸ்ட் அக்ட்ரஸ் விருது
மாடல் அழகியாகவும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்த ஹியூமா குரேஷி. முதன்முதலாக கேங்ஸ் ஆப் வஸ்ஸேபுர் படத்தின் மூலம் பாலிவுட் திரை துறையில் அடியெடுத்து வைத்தார். எடுத்து வைத்த முதல் அடியிலேயே பல விருதுகளை வென்றார். கேங்ஸ் ஆப் வஸ்ஸேபுர்-ல் வந்த இரண்டு பாகத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு பிலிம்பேர் பெஸ்ட் அக்ட்ரஸ் விருது வழங்கப்பட்டது. மேலும் பல விருதுகளை தனது முதல் படத்திலேயே அள்ளி எடுத்தார். இவ்வாறு வெற்றியைக் குவித்தவருக்கு அடுத்த படம் அதே ஆண்டு "லவ் ஷுவ் தே சிக்கன் குரானா" என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வெளியானது.

வரவேற்பு
இவ்வாறு பார்க்கும்போதே வசீகரிக்கும் அழகை கொண்ட இவருக்கு மலையாள திரையுலகம் கம்பளமிட்டு வரவேற்றது. மலையாளத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் வைட் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இவ்வாறு அறிமுகமான முதல் படத்திலேயே ஹீரோயினாக மலையாள மக்களுக்கு மிகவும் பரிச்சயமான இவர் அந்த படத்தில் நடித்ததற்காக நல்ல பெயரும் பாராட்டுக்களும் கிடைத்தது.

சேலையில் அடக்கமாக
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடித்த கையோடு தமிழ் திரையுலகத்திற்கு வந்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல் படத்திலேயே கைகோர்த்தார். கபாலி படத்தை முடித்த கையோடு மீண்டும் இணைந்த ரஞ்சித் ரஜினிகாந்த் கூட்டணியில் இவரும் ஒருவராக வந்து சேர்ந்தார். காலா படத்தில் இவர் ஜரினா என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் ரஜினியின் பழைய காதலியாக நடித்து நம் அனைவரையும் கவர்ந்தார். இவ்வாறு ரஜினியின் ஜோடியாக சேலையில் மிகவும் அடக்கமாக இவரை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் அனைவரும் இப்போது இந்தப் புகைப்படத்தை பார்த்து அசந்து போயுள்ளனர்.

சட்டை இல்லாமல்
டுவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் ட்விட்டர் அக்கவுண்டில் நியூ ப்ரொபைல் பிச்சர் என்ற ஹாஸ் டேக்குடான் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதில் கடற்கரையில் தனது கூந்தல் பறந்தவாறு தித்திக்கும் சிரிப்புடன் சட்டையை கழட்டி கையில் வைத்தவாறு, மேல் சட்டை இல்லாமல் அப்பட்டமாக தெரியும் முன்னழகை கைகளை கொண்டு மறைத்தபடி ஹாட்டாக பதிவிட்டிருந்தார் அந்த போட்டோ தற்போது இணையதள வாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ஹிந்தி படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் இவர் அடுத்தபடியாக தமிழ் படங்களில் எப்போது இந்த மாதிரி கவர்ச்சி காட்சிகளில் நடிப்பார் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











