twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகையை புறக்கணித்த விழாக்குழுவினர்... கேரள சர்வதேச திரைப்பட விழாவில் சர்ச்சை!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    கேரள சர்வதேச திரைப்பட விழாவில் நடிகையால் ஏற்பட்ட சர்ச்சை !- வீடியோ

    திருவனந்தபுரம் : 22-வது கேரள சர்வதேச திரைப்பட விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 8-ம் தேதி தொடங்கிய இந்த திரைப்பட விழா வரும் டிசம்பர் 15-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    'மின்னாமினுங்கு' என்கிற மலையாள படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் மலையாள நடிகை சுரபி லட்சுமி. கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்கு அவர் தானே முன்வந்து கேட்டும் கூட, அவரை மதித்து பாஸ் கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டது குறித்து சர்ச்சை வெடித்துள்ளது.

    Actress ignored in IFFK

    மேலும் அந்த விழாவின் ஒருங்கிணைப்பாளரான மலையாள இயக்குனர் கமலுக்கு கண்டனங்களும் எழுந்துள்ளன. "தேசிய விருதுபெற்ற நடிகை என்பதற்காக அவருக்கு தனியாகவெல்லாம் அழைப்பு அனுப்பவில்லை." எனக் கூறப்பட்டுள்ளது.

    "சொல்லப்போனால் அவர் நடித்த 'மின்னாமினுங்கு' படம் கூட இந்த விழாவில் திரையிடப்படவில்லை. தேசிய விருது பெற்றவர்களை அழைத்து கௌரவிக்கும் மேடை அல்ல இந்த திரைப்பட விழா" என இதுபற்றி கமல் தரப்பில் ரொம்பவே அலட்சியமாக பதில் சொல்லி இருக்கிறார்கள்.

    இந்த விவகாரம் கேரள திரையுலகினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. திறமையான நடிகர்களை கேரள திரைப்பட விழாக் குழுவினர் மதிப்பதில்லை எனும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

    English summary
    The 22nd Kerala International Film Festival is taking place in Trivandrum. Malayalam actress Surabhi Lakshmi is best known for her role in 'Minnaaminungu'. The controversy erupted even when she volunteered to attend the Kerala International Film Festival and was ignored by committee.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X