பிகினியில் ஹாயா போட்டிங்… அசால்டா செய்து அசத்தும் பிரபல நடிகை!
சென்னை : லாக்டவுனில் பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ள நிலையில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை இலியானா ஜாலியான வீடியோ ஒன்றை இப்பொழுது வெளியிட்டுள்ளார்.
Recommended Video
தெலுங்கு, தமிழ் என தென்னிந்தியாவை கலக்கிக் கொண்டிருந்த இலியானா இப்பொழுது ஹிந்தியிலும் பல படங்களில் நடித்து வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அவ்வப்போது சூடான அதீத கவர்ச்சியில் உள்ள புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இணையத்தை சூடாக்கி வந்த இந்த இடுப்பழகி இப்பொழுது கவர்ச்சி உடையில் ஒய்யாரமாக போட்டிங் செய்து கடல் நீரைக் கொதிக்க வைத்துள்ளார்.

பாலிவுட்டிலும் ஒரு சுற்று
தனது மெல்லிய இடையால் ரசிகர்களை மெய் மறக்க வைத்த நடிகை இலியானா தெலுங்கு சினிமாவை பல ஆண்டுகளாக ஆண்டு வந்த நிலையில் இப்பொழுது பாலிவுட்டிலும் ஒரு சுற்று வருகிறார்.

நம்பர் ஒன் நடிகையாக
மகேஷ்பாபு, விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த இலியானா தனது ரசிக்க வைக்கும் நடிப்பின் மூலமும் கலங்கவைக்கும் கவர்ச்சியின் மூலமும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு நம்பர் ஒன் நடிகையாக தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார்.

தாராளமாக பதிவிட்டு
கொரானா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் முழுவதும் நிறுத்தப்பட்டு நடிகர்கள் பலரும் விழி பிதுங்கிபோய் என்ன செய்வதென தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இலியானா இப்பொழுது ஹாயாக ஊர்சுற்றி அந்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் தாராளமாக பதிவிட்டு வருகிறார்.

பிகினி உடையில் கடலில்
திரைப்படங்களை விட பல மடங்கு அதிகமாக புகைப்படங்களில் கவர்ச்சியில் காட்சியளித்து வரும் இலியானா இப்பொழுது பிகினி உடையில் கடலில் ஒய்யாரமாக தனி ஆளாக போட்டிங் செய்து ரசித்தவாறு செம கூலான வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ரசிக்க வைத்ததோடு இந்த வீடியோ இப்பொழுது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











