Actress Ileana: நான் சிங்கிள் இல்லை.. கணவர் குறித்து வெளிப்படுத்திய இலியானா!

சென்னை: நடிகை இலியானா தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்தவர்.

தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமான இலியானா தொடர்ந்து தெலுங்குப் படங்களில் பிசியான நடிகையாக மாறியவர்.

Actress Ileana opens up about her husband in her recent chat with fans

விஜய் -ஷங்கர் கூட்டணியில் வெளியான நண்பன் படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர் இலியானா.

நடிகை இலியானா: நடிகை இலியான தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்தவர். தெலுங்கில் அறிமுகமான இவர், தமிழில் கேடி படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் இவருக்கு கைக்கொடுக்காத நிலையில், தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரிட்டாக இருந்தார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்த இலியானாவிற்கு தமிழில் நண்பன் படம் சிறப்பாக அமைந்தது.

விஜய் ஜோடி: இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்திருந்தார். விஜய் -ஷங்கர் காம்பினேஷனில் உருவாகியிருந்த இந்தப் படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த நிலையில் விஜய்க்கு ஈடுகொடுத்து இந்தப் படத்தின் பாடல்களில் இலியானாவின் நடனம் அமைந்தது. தொடர்ந்து தமிழில் வலம்வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு தமிழில் அதிகமான வாய்ப்புகள் அமையவில்லை.

திருமணத்திற்கு முன்பு குழந்தை: இதனிடையே, பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரினா கையிப்பின் சகோதரர் செபாஸ்டியனை இலியானா காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து வாய்திறக்காமல் மௌனம் சாதித்த இலியானா, திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆனார். ஆனாலும் தன்னுடைய காதலன் குறித்து எதுவும் பேசாமல் தொடர்ந்து மௌமாகவே இருந்த இலியானாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் செய்யாமலேயே இவர் குழந்தை பெற்றதால் அதிகமான விமர்சனங்களையும் சந்தித்தார்.

கணவர் குறித்து வெளிப்படை: இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது ரசிகர் ஒருவர் சிங்கிளாக இருந்துக் கொண்டு குழந்தையை எப்படி கவனிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ஒரு வரியில் இலியானா பதிலளித்துள்ளார். தான் சிங்கிள் இல்லை என்று அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் செபாஸ்டியனுடன் உற்சாகமாக போஸ் கொடுத்தபடியுள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

உறுதிப்படுத்திய இலியானா: இதன்மூலம் செபாஸ்டியனுடன் இணைந்து தான் இருப்பதை இலியானா உறுதிப்படுத்தியுள்ளார். இதுவரை இந்த உறவு குறித்து வெளிப்படையாக பேசாத இலியானா தற்போது முதல் முறையாக வாய் திறந்துள்ளது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏன் தன்னுடைய பார்ட்னர் குறித்து இலியானா அதிகமாக பேசவில்லை என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. என்ற போதிலும் தற்போது இலியானா வெளிப்படையாக பேசியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X