இரண்டாவது முறையாக கர்ப்பம்.. மீண்டும் ரசிகர்களை குழப்பிய நடிகை இலியானா!
ஐதராபாத்: நடிகை இலியானா தமிழ் தெலுங்கு மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து ஒரு கட்டத்தில் பாலிவுட்டில் படங்களில் நடிக்க துவங்கிய இலியான போர்ச்சுகீசிய படங்களிலும் நடித்து வருகிறார். தன்னுடைய நீண்ட நாள் காதலர் மைக்கேல் டோலனை சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தினார் இலியானா.
திருமணமாகாமலேயே கர்ப்பமாக இருந்த இலியானாவிற்கு கடந்த 2023ம் ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய கர்ப்பத்தை அறிவித்த பின்பே தன்னுடைய காதலரையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தற்போது தன்னுடைய இரண்டாவது கர்ப்பத்தை அவர் அறிவித்துள்ளார். தொடர்ந்து ரசிகர்களிடையே குழப்பமான பதிவுகளை பதிவிட்டு வருகிறார் இலியானா.

நடிகை இலியானா: நடிகை இலியானா தெலுங்கு படங்களில் அதிகமான அளவில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்களுடன் இணைந்து நடித்தவர். தமிழில் ஷங்கர் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தன்னுடைய இடுப்பழகால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இலியானா தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டில் இந்தியில் இலியானா நடித்து வெளியான தோ அவுர் தோ பியார் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே போர்ச்சுகீசிய படங்களிலும் இலியானா நடித்து வருகிறார்.
இலியானா முதல் குழந்தை: கடந்த 2023ம் ஆண்டில் இவர் சமூக வலைதளம் மூலம் தன்னுடைய கர்ப்பத்தை அறிவித்தார். திருமணமாகாமல் இவர் கர்ப்பமாக இருந்த நிலையில், இவரது பார்ட்னர் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து தன்னுடைய காதலர் மைக்கேல் டோலனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். தன்னுடைய கடினமான காலங்களில் டோலன் தனக்கு சிறப்பாக கைக்கொடுத்ததாக அவர் உற்சாகம் பதிவிட்டிருந்தார். முன்னதாக மைக்கேல் டோலனை நேரடியாக அறிமுகப்படுத்தாமல் பல குழப்பமான பதிவுகளை வெளியிட்டார். இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இலியானா 2வது கர்ப்பம்: தன்னுடைய குழந்தையின் பிறப்பை அறிவித்த இலியானா, தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் தன்னுடைய குழந்தையுடனான தன்னுடைய ரிலேஷன்ஷிப்பை நெகிழ்ச்சியான பதிவுகளால் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இலியானா மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளதாக தகவல்கள் இணையதளங்களில் வெளியாகியது. இது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில் இன்றைய தினம் இலியானா இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார். இந்த முறையும் குழப்பமான பதிவின் மூலமாகவே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மறைமுக பதிவு: மைக்கேல் டோலனை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ள இலியானா, தற்போது தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கான கர்ப்பம் குறித்து மறைமுகமாக பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில் பஃப் கார்ன் ஸ்நாக்சின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள இலியானா, நீங்கள் கர்ப்பமாக இருப்பதை சொல்லாமல் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து நேரடியாக கர்ப்பமாக உள்ளதை கூறாமல் ஏன் குழப்புகிறீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











