Poornima - பெயர் செம டேமேஜ் ஆச்சு.. பிக்பாஸ் பூர்ணிமாவை அன்ஃபாலோ செய்த நடிகை இந்துஜா.. காரணம் இதுதானா?
சென்னை: Poornima (பூர்ணிமா) பிக்பாஸ் 7 போட்டியாளர் பூர்ணிமாவை நடிகை இந்துஜா இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்திருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. பவா செல்லதுரை தானாக வெளியேற பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இவர்களைத் தவிர்த்து வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷு, அக்ஷயா, கானா பாலா உள்ளிட்டோர் எவிக்ட் செய்யப்பட்டனர். மேலும் எவிக்ட் செய்யப்பட்ட அனன்யா ராவ், விஜய் வர்மா ஆகியோர் மீண்டும் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாயா - பூர்ணிமா: இந்த சீசனில் பெரிய அளவில் பிரபலமானவர்கள் யாரும் இல்லை. எனவே சீசன் போராக செல்லும் என்றே கணித்திருந்தனர். ஆனால் அந்த கணிப்பை உடைக்கும்படியும் இந்த சீசன் சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக வீட்டுக்குள் இருக்கும் மாயா மற்றும் பூர்ணிமா தொடர்ந்து கண்டெண்ட் கொடுப்பவர்களாக இருந்துவருகிறார்கள்.
புல்லி கேங்: மாயாவையும், பூர்ணிமாவையும் புல்லி கேங் தலைமைகள் என்றே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். நிக்சனிடம் உள்ளாடையை காண்பித்தது, 18 + ஜோக் அடித்தது, கமல் ஹாசன் பற்றி கமெண்ட் அடித்தது என பூர்ணிமா ஒருபடி மேலே சென்று விளையாடிக்கொண்டிருக்கிறார்.
கமலின் பதிலடி: பூர்ணிமாவின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பெரிய அளவில் வெளியே ஆதரவு இல்லை என்பதே கள எதார்த்தமாக இருக்கிறது. கமல் ஹாசன்கூட கடந்த வாரம் ஹவுஸ் மேட்ஸ்களிடம் பேசும்போது பூர்ணிமாவிடம், 'முடிந்தால் என்னை இல்லாமல் கண்டெண்ட் செய்ய பாருங்கள்' என சொல்லி குட்டு வைத்தார்.
கல்யாண் - இந்துஜா: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு பார்க்கிங் படத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். இந்துஜாவும், பூர்ணிமாவும் நெருங்கிய தோழிகள் என்று கூறப்படுகிறது. ஆனால் வீட்டுக்குள் பூர்ணிமாவை இந்துஜா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எல்லோரிடமும் எப்படி பழகினாரோ அதேபோல்தான் பழகினார்.
அது பூர்ணிமாவை வருத்தம் கொள்ள செய்தது. இந்துஜா வீட்டிலிருந்து சென்றவுடன் மாயாவிடம் பூர்ணிமா, இந்துஜா தன்னிடம் ஒழுங்காக பேசாதது குறித்து ரொம்பவே வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூர்ணிமாவை நடிகை இந்துஜா அன்ஃபாலோ செய்துவிட்டார்.
இதற்கு காரணம் பூர்ணிமாவின் கேம் பிளான் அவரது பெயரை ஏற்கனவே கெடுத்துவிட்டது. இப்போது அவரது தோழியையும் அவரிடமிருந்து விலக வைக்கும் சூழலை உருவாக்கியிருக்கிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற இந்துஜா பூர்ணிமா விளையாடியதை பார்த்துதான் அன்ஃபாலோ செய்திருப்பார் என ரசிகர்கள் பேசிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











