டேய் தகப்பா.. தனியா ஒரு ரீல்ஸ் பண்ண விடுடா.. ரோபோ சங்கருடன் இந்திரஜா சங்கர் கலக்கல் ஆட்டம்!

சென்னை : நடிகர் ரோபோ சங்கர் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் களமிறங்கி நடித்து வருகிறார். காமெடி, கேரக்டர் ரோல்களில் அவரை படங்களில் பார்க்க முடிகிறது.

அவரது மனைவி மற்றும் மகளும் சின்னத்திரை மற்றும் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகின்றனர்.

இவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

நடிகர் ரோபோ சங்கர்

நடிகர் ரோபோ சங்கர்

நடிகர் ரோபோ சங்கர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கேரக்டர் ரோலாக இருந்தாலும் காமெடியாக இருந்தாலும் இவருக்கு சிறப்பாக வருகிறது. இதனால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சின்னத்திரை டூ சினிமா

சின்னத்திரை டூ சினிமா

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிதான் இவருக்கு வெளிச்சத்தை கொடுத்தது. அந்த நிகழ்ச்சி கொடுத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார் ரோபோ சங்கர். ஜீவாவின் ரௌத்திரம் படம்தான் ரோபோ சங்கரின் முதல் படம் என்றாலும், அதில் அவர் நடித்த காட்சிகள் அதிக நீளம் காரணமாக கத்தரிக்கப்பட்டன.

முன்னணி நடிகர்களுடன் நடிப்பு

முன்னணி நடிகர்களுடன் நடிப்பு

தொடர்ந்து அதே இயக்குநரின் இயக்கத்தில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் ரோபோ சங்கருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து முன்னணி காமெடி நடிகராக மாறியுள்ளார் ரோபோ சங்கர். ரஜினியின் ஜெயிலர் படம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

ரஜினியிடம் ஆசி

ரஜினியிடம் ஆசி

சமீபத்தில் இவர் தனது திருமண நாளை ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியபொழுது ரஜினியிடம் ஆசி பெற்றார். அவருடன் குடும்பத்தினருடன் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். இவரது மனைவி விஜய் டிவியின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் அடிக்கடி தோன்றி வருகிறார்.

அப்பா -மகள் சூப்பர் ஆட்டம்

இதேபோல இவரது மகள் இந்திரஜா சங்கரும் படங்களில் நடித்து வருகிறார். விஜய்யுடன் பிகில், கார்த்தியுடன் விருமன் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். தனியாக இவர்கள் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல சேது படத்தின் சியான் பாடலை இந்திரஜா ரீல்சாக செய்தபோது, அதில் ரோபோ சங்கரும் ஆட்டம் போட்டுள்ளார்.

தனியாக ரீல்ஸ் பண்ண விடுறாரா?

தனியாக ரீல்ஸ் பண்ண விடுறாரா?

இருவரும் இணைந்து இந்தப் பாடலுக்கு க்யூட் பர்பார்மென்சை கொடுத்துள்ளனர். இதனிடையே இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திரஜா, ஒரு ரீலையாவது தனியாக பண்ண விடுறாரா அப்பா என்று கேட்டுள்ளார். அவர்களின் இந்த க்யூட் நடனத்திற்கு ஏராளமானோர் லைக்ஸ்களை பகிர்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X