Indraja shankar: தாய்பாலில் மகனுக்கு தங்க நகை.. இந்திரஜாவின் தாய் பாசத்தை பாருங்க!
சென்னை: இந்த நவீன உலகத்துல புதுமையான பல விஷயங்கள், இன்றைய காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. முன்பேல்லாம் ஒருவரின் நினைவாக அவர்களின் போட்டோக்களும், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மட்டுமே இருக்கும். ஆனால், இப்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்தே, சுவரில் மாட்டுவது போல, வடிவமைத்து தருகின்றனர். இப்படி செய்வதன் மூலம், அது வீட்டிற்கு கூடுதல் அழகாகவும் இருக்கிறது. அதே சமையம் அவர்களை நினைவு படுத்துவதாகவும் உள்ளது. அப்படி ஒரு புதுமையான விஷயத்தைத் தான் நடிகை இந்திரஜா தனது மகனுக்காக செய்து இருக்கிறாள்.
நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மகளான இந்திரஜாவிற்கு கடந்த ஆண்டு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, ஜனவரி மாதம் இந்திரஜாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு உலக நாயகன் கமலஹாசன் நட்சத்திரன் என பெயர் வைத்தார். இதைத்தொடர்ந்து, நடிகை இந்திரஜா, தனது மகனை விதவிதமான கெட்டப்பில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு வருகிறார். இதையடுத்து கடந்த வாரம், நட்சத்திரன் பிறந்து 100 நாட்கள் ஆனதை, சொந்த பந்தங்களை அழைத்து கெக் வெட்டி கொண்டாடி இருந்தார். இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்.

வித்தியாசமான பரிசு: தற்போது, இந்திரஜா தனது குழந்தைக்கு தாய் பாலை வைத்து, செய்யப்பட்ட தங்க டாலரை பரிசளித்துள்ளார். முன்பெல்லாம் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள் கொடிகாய்ந்து விழுந்து விடும், அதை அப்படியே பாதுகாத்து வைத்து வெள்ளியிலோ அல்லது தங்கத்திலோ தாயத்து செய்து குழந்தைக்கு போட்டுவிடுவார்கள். இதுபோலத்தான், இப்போது, தாய் பால், குழந்தையின் தொப்புள், குழந்தையின் முடி, பல், நகத்தை வைத்து பரிசு செய்யப்படுகிறது. அதைத்தான் தற்போது, இந்திரஜா தனது குழந்தைக்கு செய்து இருக்கிறார். அதாவது, தாய் பாலில் குழந்தைக்கு சிங்கப்பல், முருகர் டாலரை செய்து இருக்கிறார்.

சூப்பர் கிஃப்ட்: இதை நடிகை இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் உங்களுக்கு மட்டும் எப்படி, புதுசு புதுசா ஐடியா வருகிறது என கேட்டு, லைக்குகளை குவித்து வந்தாலும், சிலர், இது உண்மையில் நல்ல விஷயம் தான். ஆனால், பிறந்து 3 மாதமே ஆன குழந்தையை அதிகமான லைட்டில் படுக்கவைப்பதும், மேக்கப் போட்டு புகைப்படம் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடிவில்லை என்றும், குறைந்த பட்சம் குழந்தையை ஒரு வருடமாவது தொந்தரவு செய்யாமல் இருங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.
கையில் டாட்டூ: இந்திரஜா குழந்தையை வைத்துக்கொண்டு ஒரு பக்கம் அலப்பறை செய்து கொண்டு இருக்க, ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா தனது பேரன் நட்சத்திரனின் பெயரை கையில் டாட்டூ போட்டுள்ளார். இதெல்லாம், அந்த கடைக்கான ப்ரோமோஷன் என்று ரசிகர்கள் அதில் பதிவிட்டு வருகின்றனர். நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா, பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற ரோலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து, விருமன் படத்திலும், கூரன் என்ற படத்திலும் நடித்திருந்தார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கிறார். அவர்களுக்காகவே தினம் தினம் ஏதாவது ஒரு வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











