பிறந்த நாளில் பாட்டு ரிலீஸ் பண்ணும் நடிகை இந்துஜா… சூப்பர் டூப்பராகுமா

By R VINOTH

சென்னை: சூப்பர் டூப்பர் நாயகி இந்துஜா நாளைக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி தன்னோட பிறந்தநாளை கொண்டாடுறாங்க. தன்னோட ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசா தான் நடிச்ச படத்தோட பாடலை ட்விட்டர்ல ரிலீஸ் பண்ணப்போறதா தகவல் வெளியாகியிருக்கு.

இந்துஜா சீயான் விக்ரமோட மகன் துருவ் கூட ஜோடியா சூப்பர் டூப்பர் படத்தில நடக்கிறாங்க. இந்த படத்தில இருக்கிற ஒரே ஒரு மெலடி சாங் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். மற்ற பாட்டெல்லாம் செம பெப்பியான சாங்ஸ்.

Actress Induja Releasing Super Duper Movie song on her Birthday

நாளைக்கு சாயந்தரம் 5 மணிக்கு இந்துஜா தன்னோட ட்விட்டர் பக்கத்தில இந்த பாட்ட ரிலீஸ் பண்றாங்க. அதனால ட்விட்டர் அக்கவுண்ட் மூலம் யூடியூப்பில் எல்லாரும் நீங்க வந்து link press பண்ணி இந்த பாட்டை கேக்கலாம். இந்தப் படத்தோட ஆடியோ ரைட்ஸ் வாங்கியிருக்கறது Zee மியூசிக் சவுத்.

இந்தப் பாட்ட பாடுனது யாருன்னு பார்த்தீங்கன்னா ஸ்ரீராம் பார்த்தசாரதி. இவரே நிறைய மெலடி பாட்டெல்லாம் பாடி இருக்காரு அதுல குறிப்பா பிதாமகன் படத்துல பாடுன இளங்காற்று வீசுதே பாட்டும், தங்க மீன்கள் படத்துல பாடுன ஆனந்த யாழை மீட்டுகிறாள் பாட்டும் உங்க எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.

இந்த பாட்டு முழுக்க முழுக்க சென்னையிலேயே ஷூட் பண்ணின பாட்டு, அதோட இது ஒரு மாண்டேஜ் சாங். இந்தப் படத்தை எழுதி டைரக்ட் பண்ணயிருக்கறது ஏ.கே. மியூசிக், கம்போஸ் பண்ணியிருக்கறது திவாகரா தியாகராஜன்.

வேலூரைச் சேர்ந்த இந்துஜா பில்லாபாண்டி, மேயாதமான், மெர்க்குரி, பூமராங் உள்ளிட்ட பல படங்கள்ல நடிச்சிக்கிருக்காங்க. அவங்களுக்கு ரசிகர்கள் ஆர்மி குரூப் இருக்கு. இந்துஜா இப்போ தளபதி விஜயோட 63ஆவது படத்தின் ஷூட்டிங்கில் ரொம்ப பிசியா இருக்காங்க இதுக்கு நடுவுல அவங்க பிறந்த நாள் அதுவுமா இந்த பாட்டு ரிலீஸ் பண்றது ரசிகர்களுக்கும், ஆர்மி குரூப்புக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி தான். இந்துஜா ரசிகர்களுக்கும் இந்துஜா ஆர்மி குரூப்புக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். என்ன இந்துஜா ஆர்மீஸ் பாட்ட கேட்க ரெடியா இருக்கீங்களா?

More from Filmibeat

Read more about: indhuja இந்துஜா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X