செதுக்கி வச்ச சிலை மாதிரி இருக்கீங்களே.. கிளாமர் பொங்க தியானம் செய்யும் இனியா.. ஜொள்ளும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை இனியா தியானம் செய்யும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.
மலையாள தேசத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை இனியா. மலையாளத்தில் சில படங்களில் நடித்த அவர், தமிழில் பாடகசாலை படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து யுத்தம் செய், வாகை சூட வா, மவுன குரு, அம்மாவின் கைப்பேசி, கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், மாசாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மலையாளம் கன்னடம்
இனியா நடிப்பில் வெளியான வாகை சூடவா திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்தது. அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இனியா. தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படத்தில் நடித்து வரும் இனியா, கன்னட படத்திலும் நடிக்கிறார்.

வாய்ப்பு இல்லை
தமிழில் தற்போது காஃபி மற்றும் கலர்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் மலையாள தொலைக்காட்சி சேனல்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இருந்த போதும் தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கிளாமர் போட்டோ ஷூட்
இதனை தொடர்ந்து கிளாமரில் குதித்தார் இனியா. அவ்வப்போது கிளாமர் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

முன்னழகை காட்டி
அந்த வகையில் அண்மையில் டீப் ஓபன் ஷார்ட் டாப்ஸில் அவர் நடத்திய போட்டோ ஷூட் பெரும் வைரலானது. தொடை அழகையும் முன்னழகையும் காட்டி கிறங்க வைத்தார்.

தியானம் செய்யும் இனியா
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு போட்டோவை ஷேர் செய்து இன்ஸ்டாகிராமை திணறடித்துள்ளார். அதாவது இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் முட்டி வரை உள்ள கவுனை அணிந்து கல்லின் மீது அமர்ந்து சிலை போன்ற போஸில் தியானம் செய்கிறார் இனியா.

சிலை போல் இருக்கிறீர்கள்
இனியாவின் இந்த போஸை பார்த்த ரசிகர்கள் செதுக்கி வைத்த சிலை போன்று இருக்கிறீர்கள் என்று கூறி ஜொள்ளு விட்டுள்ளனர். இந்த போட்டோவுக்கு அமைதிக்கான சிறந்த போர்ட்டல் இயற்கைதான் என்றும் பதிவிட்டுள்ளார் நடிகை இனியா.


Click it and Unblock the Notifications











