அந்த புது ஹீரோவுக்காக அட்ஜெஸ்ட் பண்ண ரெடியா இருந்தேன்.. விமல் பட ஹீரோயின் ஓபனா பேசிட்டாரே!

சென்னை: விமலுடன் வாகை சூடவா படத்தில் நடித்து பிரபலமான நடிகை இனியா பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சாய்ரா எனும் படத்தின் மூலம் 2005ல் சினிமாவில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் இனியா.

தமிழில் பாடகசாலை படத்தின் மூலம் அறிமுகமானாலும் வாகை சூடவா படம் தான் அவருக்கு அட்ரெஸாகவே மாறியது. யுத்தம் செய், மாசாணி, சென்னையில் ஒரு நாள், பொட்டு, ரைட்டர், திரைக்கு வராத கதை, நான் கடவுள் இல்லை என பல படங்களில் நடித்துள்ளார்.

Actress Ineya talks about ready to adjust with Seeran movie hero

தற்போது சீரன் எனும் புதிய படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்து வரும் இனியா அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசும் போது படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த இளம் ஹீரோவுக்காக நிறைய அட்ஜெஸ்ட் பண்ண நினைத்தேன் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

திறமையான நடிகை: வாகை சூடவா, மெளன குரு உள்ளிட்ட படங்களிலேயே தனது நடிப்பை வெளிப்படுத்தி தான் எப்படியொரு திறமையான நடிகை என்பதை வெளிப்படுத்திய இனியா தொடர்ந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

தமிழ், மலையாளம், கன்னடா உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இனியா சின்னத்திரை தொடர்களிலும் ரியாலிட்டி ஷோக்களில் தனது பங்களிப்பை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அறிமுக இயக்குநர் துரைமுருகன் இயக்கி வரும் சீரன் திரைப்படத்தில் ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா, நரேன், சென்ராயன் உள்ளிட்ட பல நடித்து வருகின்றனர்.

அட்ஜெஸ்ட் பண்ண நினைத்தேன்: இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் ஜேம்ஸ் கார்த்திக் சினிமாவுக்கு புதிது என்பதால் அவருடனான நடிக்க வேண்டிய பல காட்சிகளில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என நினைத்தேன். ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் ஒவ்வொரு சீனிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி என்னையே ஆச்சரியப்பட வைத்து விட்டார் ஜேம்ஸ் கார்த்திக் என பாராட்டியுள்ளார் நடிகை இனியா.

Actress Ineya talks about ready to adjust with Seeran movie hero

சீரன் என்றால் சிறந்தவன் என்பது பொருள். இந்த படத்தின் ஹீரோ ஜேம்ஸ் கார்த்திக் தான் படத்தை தயாரித்தும் உள்ளார். தனது வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த படம் உருவாக்கப்பட்டதாக அந்த நிகழ்ச்சியில் ஜேம்ஸ் கார்த்திக் பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X