மியா... இனியாவின் புதிய இசை ஆல்பம்!

Recommended Video

கேன்சர் நோயாளிகளுக்காக மியா ஆன இனியா!- வீடியோ

சென்னை: நடிகை இனியா மியா என்ற சமூக விழிப்புணர்வு இசை ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த ஆல்பத்தின் மூலம் வசூலாகும் பணத்தில் கேன்சரால் பாதித்த 10 பேருக்கு மருத்துவ உதவி செய்ய திட்டமிட்டப்பட்டுள்ளது.

வாகை சூடவா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை இனியா. முதல் படத்திலேயே தமிழக அரசால் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற இவருக்கு, அடுத்தடுத்து சொல்லிக் கொள்ளும்படி படங்கள் அமையவில்லை.

இந்நிலையில், இனியா தற்போது மியா என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளார். இது ஒரு சமூக விழிப்புணர்வு பாடல் ஆல்பம். இந்த ஆல்பத்தை மகேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இதற்கு அபிரெஜி, லாவெல், ஜெயன் ஆகியோர் இசை அமைத்துள்ளனர். பாடலுக்கு அருண் நந்தகுமார் நடனம் அமைத்துள்ளார். இனியா நடித்த இந்த ஆல்பம் விரைவில் வெளிவரவிருக்கிறது.

கதைக்களம்

கதைக்களம்

மியா என்ற நடனப்பெண் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியது இது. பிரபல டான்சராகி, விருதுகளைப் பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழும் மியா, அதற்காக சந்திக்கும் பிரச்சினைகளைத் தான் இந்த ஆல்பம் பேசுகிறது. லட்சியத்தை அடைய வேண்டுமென்றால் முயற்சியை கை விடக் கூடாது என்று போராடும் மியா, தடைகளை தவிடு பொடியாக்கி எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே கதைக்களம்.

இசை ஆல்பம்

இசை ஆல்பம்

அமயா எண்டர்டைமெண்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக இனியா இந்த ஆல்பத்தை தயாரித்து, மியா கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். இந்த இசை ஆல்பத்தில் பாடல்களுடன் வசனங்களும் இடம் பெற்றுள்ளது.

நன்றி

நன்றி

இது பற்றி இனியா கூறுகையில், "இந்த மியா வீடியோ ஆல்பம் எனது முதல் முயற்சி. இதற்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளேன். இந்த வீடியோ ஆல்பத்தை பார்த்து பாராட்டிய நவீன்பிரபாகர், ரியாஸ், கபாலிபாபு மூவரும் பியாண்ட்பிரேம்ஸ் நிறுவனம் மூலம் இந்த வீடியோ ஆல்பத்தை பிரமாதமாக வெளியிடுகிறார்கள்.

டான்சர்களுக்கு காணிக்கை

டான்சர்களுக்கு காணிக்கை

இந்த ஆல்பத்தின் மூலம் வசூலாகும் பணத்தில் கேன்சரால் பாதித்த 10 பேருக்கு மருத்துவ உதவி செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இதை போல இன்னும் நிறைய திட்டமிட்டுள்ளோம். இந்த உலகத்தில் உள்ள எல்லா டான்ஸர்களுக்கும் மியா வை காணிக்கையாக்குகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

வித்தியாசம்

வித்தியாசம்

வழக்கமான இசை ஆல்பங்களில் இருந்து வேறுபட்டு, ஹைடெக் சினிமா நேர்த்தியுடன் இந்த ஆல்பம் உருவாக்கப் பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X