ஓஷோ புக்குடன் போஸ் கொடுத்த நடிகை ..இப்படி புக் படிப்பது தான் ட்ரெண்டிங் !

கொச்சி : நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களில் கண்களில் தென்பட்டார் இனியா. ஓஷோ புத்தகத்தோடு படுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கு சமயங்களில் நடிகைகள் செய்யும் பல வேளைகளில் புத்தகம் படிப்பதும் ஒன்று. நடிகைகள் புத்தகம் படிக்கும் மாதிரியான புகைப்படங்களுக்கு எப்போதுமே மவுசு தான்.

சமைப்பதும்,உடற்பயிற்சி செய்வதும் மட்டும் இல்லாமல் புத்தகம் படிப்பது ரசிகர்களை மட்டும் இல்லாமல் புத்தக பிரியர்களையும் ஈர்க்கிறது. அந்த புகைப்படங்கள் அனைத்தும் வைரலாக பரவி வருகிறது .

மலையாள நடிகை

மலையாள நடிகை

தமிழில் நடிக்கும் நடிகைகளில் மலையாள நடிகைகளே அதிகம், அந்த வரிசையில் இனியாவும் ஒருவர் .கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் ,ரெயின் ரெயின் கம் அகைன் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். முதலில் மலையாள படங்களிலேயே ஆர்வம் காட்டி வந்த இனியா சேக்ரெட் ஃபாஸ் (sacred face) என்ற ஆங்கில குறும்படத்தில் நடித்தார் .

புதிய வாய்ப்புகள்

புதிய வாய்ப்புகள்

மலையாள நடிகைகள் தமிழில் ஆர்வம் காட்டுவது ஒன்றும் புதிதல்ல, அந்த வகையில் இனியாவும் சேர்ந்து கொண்டார். பாடகசாலை என்ற தமிழ் படத்தில் தனது தமிழ் திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் நடிப்பு அந்த படத்தில் நன்கு பேசப்பட்ட நிலையில் நிறைய புதிய வாய்ப்புகள் கதவை தட்டியது .

செம நடிப்பு

செம நடிப்பு

வாகை சூடவா படத்திற்கு பிறகு, பல இயக்குனர்கள் இவரை அணுகினர், வாகை சூடவா, மௌன குரு, அம்மாவின் கைபேசி, சென்னையில் ஒரு நாள் என்று தொடர்ந்து வெற்றி படங்களையே கொடுத்தார் இனியா மலையாளத்திலும், தமிழிலும் கிட்டத்தட்ட 35 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் இனியா.

பொழுது போக்கு

பொழுது போக்கு

ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கும் நடிகைகள் அனைவரும் தங்களுக்கு பிடித்த விஷயங்களையே செய்து வருகின்றனர்.சமைப்பதையும், சாப்பிடுவதையும் கூட புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா, ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களும் இயக்குனர்களும் தங்களை மறக்காத அளவிற்கு எப்போதும் ஆக்ட்டிவாகவே இருக்கின்றனர்.

புத்தகம் வாசித்தல்

புத்தகம் வாசித்தல்

புத்தகம் வாசிப்பது என்பது பலருக்கும் பிடித்த ஒன்று .அந்த வகையில் தற்போது ட்ரெண்டாக இருப்பது ஓஷோ புத்தகம் தான் .பல நடிகைகள் ஓஷோ புத்தகத்துடன் போஸ் கொடுப்பதையே தனது வேலையாக செய்து வருகின்றனர்.சமீபத்தில் இனியாவும் ஓஷோவின் தி புக் ஆப் மேன் என்ற புத்தகத்துடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார் .இந்த புகைப்படம் அவரது ரசிகர்களை மட்டும் இல்லாமல் புத்தக பிரியர்களை வெகுவாக கவர்ந்து இருக்கின்றது .

ஓஷோ

ஓஷோ

சமீபத்தில் நடிகை அமலா பாலும் ஓஷோவின் தி புக் ஆப் வுமன் என்ற புத்தகத்தை வைத்து புகைப்படத்தை வெளியிட்டு ,பல சர்ச்சையான கருத்துக்களையும் வெளியிட்டார் .அந்த சர்ச்சைகளின் மூலம் இந்த ஊரடங்கு சமயத்தில் கூட அனைவராலும் பேசப்பட்டார் .அதன் பிறகு அவர் எதை செய்தாலும் ட்ரெண்டிங்காகவே இருக்கிறது. தமிழ் ,மலையாளம் போன்ற மொழிகளில் மட்டுமே நடித்து வந்த இனியா, துரோனா என்ற படத்தின் மூலம் கன்னடத்திலும் அறிமுகம் ஆகிறார் .இப்போது காபி என்ற தமிழ் படம் ஒன்றை தன் கை வசம் வைத்துள்ளார் .கூடிய விரைவில் இதன் படப்பிடிப்புகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .இந்த ஓஷோ புத்தகத்தின் மூலம் பலராலும் மீண்டும் அறியப்பட்ட இனியா ,இதன் மூலம் பட வாய்ப்புகள் மீண்டும் கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X