சகோதரனை தேடும் பெண்ணின் கதை.. காஃபி திரைப்படத்தை நேரடியாக ஒளிபரப்பும் பிரபல சேனல்!

சென்னை : இனியா லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள காஃபி படம் வரும் நவம்பர் 27ம் தேதி பிரபல சேனலில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

கடத்தப்பட்ட தனது சகோதரனை தேடும் வலிமையான பெண்ணாக இந்தப் படத்தில் இனியா நடித்துள்ளார். இந்தப் படம் குறித்தும் சக நடிகர்கள் குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அதிரடி த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சாய் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனியாவின் காஃபி படம்

இனியாவின் காஃபி படம்

இனியா நடிப்பில் உருவாகியுள்ள காஃபி திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 27ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் இந்தப் படத்தை நேரடியாக கலர்ஸ் தமிழ் சேனல் ஒளிபரப்ப உள்ளது. வலிமையான இளம் பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் கடத்தப்பட்ட தன்னுடைய சகோதரனை மீட்கும் பெண்ணாக இனியா நடித்துள்ளார்.

அதிரடி த்ரில்லர் படம்

அதிரடி த்ரில்லர் படம்

அதிரடி த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சாய் கிருஷ்ணா இயக்கியுள்ளார். படத்தில் இனியாவுடன் நடிகர்கள் ராகுல் தேவ், முகதா ஆகியோர் தமிழில் முதல்முறையாக நடித்துள்ளனர். சிறு வயதிலேயே பெற்றோரை இழக்கும் சத்யா கேரக்டரில் இனியா நடித்துள்ளார். நம்பிக்கையை இழக்காமல் போலீசாக ஆசைப்படும் சத்யா, சூழ்நிலை காரணமாக வாகன ஓட்டுநராக மாறுவதாக கதைக்களம் காணப்படுகிறது.

கடத்தப்படும் இனியாவின் சகோதரன்

கடத்தப்படும் இனியாவின் சகோதரன்

தன்னுடைய சகோதரனின் நல்வாழ்க்கைக்காக வாகன ஓட்டியாக மாறும் இனியாவின் முயற்சியின் பலனாக அவரது சகோதரன் கார்த்திக்கிற்கு பெங்களூருவில் வேலை கிடைக்கிறது. ஆனால் அவரது மகிழ்ச்சி நீடிக்காமல் கடத்தப்படுகிறார். இதையடுத்து சத்யா தனது சகோதரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவரது முயற்சி பலித்ததா என்பதாக படத்தின் கதைக்களம் காணப்படுகிறது.

இயக்குநர் சாய் கிருஷ்ணா

இயக்குநர் சாய் கிருஷ்ணா

இந்தப் படம் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாவது குறித்து இயக்குநர் சாய் கிருஷ்ணா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் வலிமையான பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தனது முதல் படம் அமைந்துள்ளது குறித்தும் அவர் உற்சாகம் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ரசிகர்களுக்கு சீட்டின் நுனியின் அமர்ந்து படம் பார்க்கும் அனுபவத்தை இந்தப் படம் தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அற்புதமான அனுபவம்

அற்புதமான அனுபவம்

தொடர்ந்து இந்தப் படம் ரசிகர்களுக்கு அற்புதமான அனுபவத்தை தரும் என்று படத்தின் நாயகி இனியா தெரிவித்துள்ளார். ராகுல் தேவ் மற்றும் முக்தா போன்ற மூத்த நடிகர்களுடன் இணைந்து நடித்தது சிறப்பான அனுபவமாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் சத்யா போன்ற துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்தது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X