'தோடா'...இஷாவின் கிளாமர்!
சென்னை: வெறும் பாலை யாரும் ருசித்து சாப்பிட மாட்டார்கள். கூடவே டேஸ்ட்டியான சர்க்கரையும் சேர வேண்டும். அதுபோலத்தான் கிளாமர் இல்லாத சினிமாவை இப்போதெல்லாம் யாரும் விரும்புவதில்லை.
இந்த மக்களின் மன நாடியை சரியாக பிடித்துப் பார்க்கும் வல்லமை கொண்டவர்கள்தான் கிளாமரையும் சரிவிகித சமானத்தில் சேர்த்தளித்துக் கொடுக்கிறார்கள்.
அந்த வகையில் தோடா அட்றா சக்க என்ற படத்தில் கவர்ச்சியும் பேலன்ஸ்டாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

பூமிகா சினிமா
பூமிகா சினிமா என்ற நிறுவனம் தயாரிக்கும் படம்தான் தோடா அட்றா சக்க.

ஆர்யன் ராஜேஷ்தான் நாயகன்
ஆர்யன் ராஜேஷ் நாயகனாக நடிக்கிறார்.

இரண்டு நாயகிகள்
படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் மோனிகா சிங். இன்னொருவர் இஷா.

கஞ்சாவும் உண்டு...
படத்தில் காமெடிக்கு கஞ்சாவைப் பயன்படுத்தியுள்ளனர்... அதாவது கஞ்சா கருப்பு இருக்கிறார்.

சுனைனா மேனேஜர்தான் தயாரிப்பாளர்
சுனைனா உள்பட பல்வேறு நடிகைகளுக்கு மேனேஜராக இருந்தவரான டி.ரமேஷ் பாபு படத்தைத் தயாரிக்கிறார்.

ஹைதராபாத்- ஊட்டி -சென்னை
படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத், சென்னை, ஊட்டி என வளைத்து வளைத்துப் படமாக்கியுள்ளனர்.

அடுத்து மெட்ராஸில் முகாம்
அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் திட்டமிட்டுள்ளனர். படம் காமெடி கலந்த அதேசமயம் திரில்லர் படமாம்.

கவர்ச்சிக் காட்சிகள்
சமீபத்தில் கவர்ச்சிக் காட்சிகள் நிரம்பிய போர்ஷனை படமாக்கினார்களாம்.

இஷாவும், ராஜேஷும்
இந்தக் கவர்ச்சிக் காட்சிகளில் இஷாவும், ஆர்யன் ராஜேஷும் இணைந்து நடித்தார்களாம். சென்னையில் இதைப் படமாக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











