'அந்த சூப்பர்ஸ்டார் நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார்'.. ஷாக் கொடுக்கும் விஜய் ஹீரோயின்!

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெரிய நடிகர், நடிக்க வாய்ப்பு தருவதற்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை இஷா கோபிகர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

படுக்கைக்கு அழைத்த சூப்பர்ஸ்டார் நடிகர்

மும்பை: பெரிய நடிகர் ஒருவர் தன்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதற்காக படுக்கைக்கு அழைத்ததாக நடிகை இஷா கோபிகர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழில் காதல் கவிதை, என் சுவாச காற்றே, நெஞ்சினிலே, ஜோடி, நரசிம்மா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இஷா கோபிகர். பாலிவுட் நடிகையான இவர் இந்தியில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

இந்தி சினிமாவில் பிஸியாக நடிகையாக இருந்த அவர், திருணமத்திற்கு பிறகு நடிப்பிற்கு ஓய்வு கொடுத்திருந்தார். இஷா தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸ்சை ஆரம்பித்துள்ளார்.

 அதிர்ச்சி தந்த இஷா கோபிகர்

அதிர்ச்சி தந்த இஷா கோபிகர்

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு இஷா கோபிகர் பேட்டி அளித்துள்ளார். அதில் தான் நடிக்க வந்த புதிதில் பலர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறியுள்ளார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் நடிகர் ஒருவர், தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி அவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பெரிய ஹீரோ

பெரிய ஹீரோ

இதுகுறித்து மேலும் அவர், "ஒரு தயாரிப்பாளர் என்னிடம் வந்து இந்த படத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள். படத்தின் ஹீரோவிடம் நீங்கள் நல்லப் பெயர் வாங்குவது மிக அவசியம். அவருடைய குட்புக்கில் இடம்பிடித்தால் தான் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும். எனவே நீங்கள் அவருக்கு போன் செய்துவிட்டு போய் பாருங்கள் எனக் கூறினார்.

தனியாக வரச் சொன்னார்

தனியாக வரச் சொன்னார்

அந்த ஹீரோவுக்கு நான் போன் செய்து பேசினேன். எந்தெந்த நேரம் என்னென்ன செய்வார், எங்கு இருப்பார் எனும் முழுவிவரத்த அந்த நடிகர் என்னிடம் சொன்னார். பிறகு நான் யாருடன் வருவேன் எனக் கேட்டார். டிரைவருடன் வருவேன் என்றேன். நீ யாரையும் அழைத்து வராதே தனியாகவா என்றார்.

கோபத்தில் திட்டினேன்

கோபத்தில் திட்டினேன்

எனக்கு கோபம் வந்துவிட்டது. சாரி நான் நாளை பிரீயாக இல்லை எனக்கூறி போனை வைத்துவிட்டேன். பிறகு அந்த தயாரிப்பாளருக்கு போன் செய்து திட்டினேன். நடிக்கும் வாய்ப்புக்காக நான் இப்படி நடந்து கொள்ள மாட்டேன் என அவரிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டேன்", என இஷா கோபிகர் கூறியுள்ளார்.

பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டன

பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டன

இதன் கரணமாகவே தனக்கு பல படங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாகவும் இஷா தெரிவித்துள்ளார். பல சமயங்களில் தான் நடிக்க ஒப்பந்தமாகும் சூழலில், சிபாரிசுடன் வரும் வேறு யாருக்காவது அந்த வாய்ப்பு போய்விடும் என அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.

பாலிவுட்டில் பரபரப்பு

பாலிவுட்டில் பரபரப்பு

அவரது இந்த பேட்டி பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஷாவை படுக்கைக்கு அழைத்த அந்த பெரிய நடிகர் யார் என பலரும் மண்டையை போட்டு உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ரசிக்கர்கள் கேள்வி

ரசிக்கர்கள் கேள்வி

மீடூ ஹேஷ்டேக் மூலம் காஸ்டிங் கவுச் உள்ளிட்ட விஷயங்களை பல நடிகைகள் அம்பலப்படுத்தி வந்தனர். அப்போது அமையாக இருந்த இஷா கோபிகர் இப்போது இப்படி பேசியிருப்பது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X