Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பாக்ஸிங் செய்யும் அழகிய ராட்சசி ஐஸ்வர்யா மேனன்!
சென்னை : படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா மேனன் இப்பொழுது கதாநாயகியாக பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்
ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தால் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்
நடிப்பு,நடனம் என அனைத்திலும் திறமை வாய்ந்த ஐஸ்வர்யா கவர்ச்சியிலும் கொஞ்சம் கூட வஞ்சனையில்லாமல் புகைப்படங்களை பதிவிட்டு வர இப்பொழுது பாக்ஸிங் செய்யும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார் .

சிறுசிறு வேடங்களில்
எந்த ஒரு திரை பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் வந்து செல்வார் . அந்த வகையில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன்பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு,ஆப்பிள் பெண்ணே உள்ளிட்ட படங்களிலும் நடித்த இவருக்கு வீரா என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் கிருஷ்ணா நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் ஹீரோயினியாக ஐஸ்வர்யா மேனன் அறிமுகம் செய்யப்பட்டார்

படங்களை கலாய்த்து
தமிழில் இதுவரை வெளியான அனைத்து திரைப்படங்களையும் கலாய்த்து தமிழ்ப்படம் என்ற பெயரில் வெளியாகி ஹிட் கொடுத்த மிர்ச்சி சிவா அதன் இரண்டாவது பாகத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார். முழுக்க முழுக்க காமெடியை மையமாகக் கொண்டு உருவான இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்து இருப்பார். இந்த படமும் இவருக்கு நல்ல வெற்றியைப் பெற்றுத் தந்தது

சிரிக்கும் நோயால்
இந்த நிலையில் இசையமைப்பாளராக இருந்து இப்போது ஹீரோவாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் வித்தியாசமான சிரிக்கும் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞராக நடித்துள்ள நான் சிரித்தால் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்கியிருந்தார். கடந்த வருடம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா மேனன் நடிப்பு மற்றும் நடனம் என அனைத்திலும் பட்டையை கிளப்பி இருப்பார்

பாக்ஸிங் செய்யும் அழகிய ராட்சசி
நான் சிரித்தால் வெற்றிக்கு பிறகு தமிழில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகி உள்ளது. மேலும் நாளுக்கு நாள் சமூக வலைத்தளத்தில் இவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே உள்ளது. நடிப்பு,நடனம் என அனைத்திலும் சிறந்து விளங்கும் ஐஸ்வர்யா மேனன் கவர்ச்சியிலும் குறை வைப்பதில்லை. அதீத கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்தநிலையில் ஜிம்மில் பாக்ஸிங் செய்தவாறு படு கவர்ச்சியாக எடுத்த சமீபத்திய புகைப்படங்களை இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இணையதளத்தை கொதிக்க விட்டுள்ளார் .