கொரோனா தடுப்பூசி போடனுமா… முதல்ல இத பாருங்க… ஐஸ்வர்யா மேனின் சிம்பிள் ஐடியா !
சென்னை : நடிகை ஜஸ்வர்யா மேனன், கொரோனா தடுப்பூசியை எளிதாக பதிவு செய்யும் முறை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
சித்தார்த் நடித்த தீயாவேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
இவர் கடைசியாக ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நான் சிரித்தால் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

ஹீரோயினாக
தமிழ் சினிமாவில் தமிழ் படம் 2 மூலம், கதாநாயகியாக திரைத்துரையில் அறிமுகமானவர் ஜஸ்வர்யா மேனன். இதற்கு முன்பு பல தமிழ் படங்களில் நடித்தாலும் இந்த படம் தான் இவரை தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பெற செய்தது.

சிறிய கதாபாத்திரம்
தமிழில் தனது திரை பயணத்தை தொடங்கிய ஜஸ்வர்யா மேனன் முதல் திரைப்படமாக சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் லவ் ஃபெயிலியர் என்ற பெயரில் ரீமேக் செய்து வெளிவந்தது அதிலும் ஒரு சிறிய கதாபாத்தில் இவரே நடித்துள்ளார்.

பாராட்டை பெற்றார்
பின்னர் கன்னட திரையுலகில் கால் பதித்தார் ஜஸ்வர்யா, தாஸாவால படத்தில் மனநல பாதிக்கப்பட்ட பெண்ணாக வரும் கதாபாத்திரம் இவருக்கு பாராட்டுக்களை பெற்றுத் தந்தது. தமிழ் மற்றும் கன்னட படங்களில் தொடர்ந்து நடித்தார் ஜஸ்வர்யா மேனன். மலையாள சினிமாவில் பகத் பாசில் நடித்த படமான மாண்சூன் மேங்கோஸ் படத்தில் அறிமுகமானார்.
தடுப்பூசி பதிவு
ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கொரோனா தடுப்பூசியை எளிதாக பதிவு செய்யும் முறை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எந்த தளத்திற்கு போனால் தடுப்பூசி கிடைக்கும், எந்த வகையான தடுப்பூசி கிடைக்கும், அந்த மருத்துவமனையின் பெயர் மற்ற விவரங்கள் கிடைக்கும் என்பதை இந்த வீடியோவில் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











