Actress Ivana: சீக்கிரம் நெகட்டிவ் ரோலில் நடிங்க சார்.. ஹரீஷ் கல்யாணிடம் சொன்ன இவானா!

சென்னை: நடிகர் ஹரீஷ் கல்யாண், இந்துஜா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் பார்க்கிங்.

கடந்த 1ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது. படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது.

Actress Ivana hails Harish kalyan for Parking movie

படத்திற்கு பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் மிகப்பெரிய வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஹரீஷின் நடிப்பு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று வருகிறது.

நடிகர் ஹரீஷ் கல்யாண்: நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் எல்ஜிஎம். தோனி தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் நதியா, இவானா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களை என்டர்டெயின் செய்ய தவறவில்லை. தன்னுடைய மாமியாராகப்போகும் நதியாவுடன் தனியாக பயணம் மேற்கொள்கிறார் இவானா. இருவரின் தனிப்பட்ட கேரக்டர் குறித்து அறிந்துக் கொள்ளும் முயற்சியாக இந்தப் பயணம் அமைகிறது.

பார்க்கிங் படம்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது பார்க்கிங். இந்தப் படத்தில் ஹரீஷுடன் இந்துஜா, எம்எஸ் பாஸ்கர் லீட் கேரக்டரில் நடித்துள்ளனர். இந்தப் படம் தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தனிமனிதனுக்குள் ஏற்படும் ஈகோ எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை இந்தப் படம் கதைக்களமாக கொண்டுள்ளது.

குறைந்த பட்ஜெட்.. நிறைவான படம்: இந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி நிறைவான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. ஒரு காரை பார்க்கிங் செய்வதில் ஏற்படும் பிரச்சினை எந்த அளவிற்கு செல்கிறது என்பதை கதைக்களமாக கொண்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் குறைவான பட்ஜெட்டில் உருவாகி சிறந்த வெற்றிப்படங்களாக மாறியுள்ள அயோத்தி, டாடா, போர்த்தொழில், குட்நைட், சித்தா படங்களில் வெற்றி வரிசையில் தற்போது பார்க்கிங் படமும் இணைந்துள்ளது.

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்: ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஹரீஷ் கல்யாண் மற்றும் எம்எஸ் பாஸ்கர் இடையில் ஏற்படும் ஈகோ மற்றும் அதன் காரணமாக வரும் சண்டைகளால் ஏற்படும் பிரச்சினைகளை சிறப்பாக காட்சிப் படுத்தியுள்ளது. இந்தப் படம் ரசிகர்களை மட்டுமில்லாமல் பிரபலங்களின் பாராட்டுக்களையும் தொடர்ந்து பெற்று வருகிறது. அந்த வகையில் நடிகை இவானாவும் படத்திற்கு மிகப்பெரிய சர்ட்டிபிகேட்டை கொடுத்துள்ளார்.

சீக்கிரமா வில்லனா நடிங்க சார்: பார்க்கிங் ஒவ்வொரு பிட்டிலும் மிகப்பெரிய கலைநயத்தை வெளிக்கொண்டு வருவதாக அவர் பாராட்டியுள்ளார். படத்தில் ஹரீஷ் கல்யாண் நடிப்பு ஃபயராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரது வித்தியாசமான நடிப்பை இந்தப் படத்தில் பார்த்ததாகவும் அவரது கேரியரில் பெஸ்ட் படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹரீஷ் கல்யாணை நெகட்டிவ் ரோலில் விரைவில் பார்க்க விருப்பமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்துஜா சூப்பர்: படத்தில் எம்எஸ் பாஸ்கர் 100 சதவிகிதம் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் ராம்குமாரின் ஸ்கிரீன்ப்ளேவிற்கும் பாராட்டுக்களை பகிர்ந்துள்ள இவானா, நடிகை இந்துஜா இந்தப் படத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளதாகவும் அழகாக நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். சாம் சிஎஸ் இசை படத்திற்கு கூடுதல் பலம் என்று கூறியுள்ள இவானா, படத்தை திரையரங்குகளில் பார்க்க மிஸ் செய்ய வேண்டாம் என்றும் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X