Thalapathy 68 movie: தளபதி 68 படத்தில் இணைந்த நடிகை இவானா.. என்ன கேரக்டர் தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் புத்தாண்டையொட்டி ஜனவரி 1ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
படத்தில் விஜய் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளதாகவும் படம் டைம் டிராவலை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் லியோ படம்: நடிகர் விஜய்யின் லியோ படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பான் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்திருந்தார் விஜய். இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.
தளபதி 68 படம்: இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சென்னையிலேயே படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளும் எடுக்கப்பட்டன. தொடர்ந்து தாய்லாந்தில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. இந்தப் படத்தில் தந்தை மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இளம் விஜய்க்காக லாஸ் ஏஞ்சல்சில் டீ ஏஜிங் தொழில்நுட்பத்தில் லுக் டெஸ்ட்டும் எடுக்கப்பட்டது.
இயக்குநர் வெங்கட்பிரபு: இந்நிலையில் இந்தப் படத்தில் வெங்கட் பிரபு சினிமாட்டிக் யூனிவர்ஸ் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தின் 2 ஆண்டுகள் கொண்டாட்டத்தை படக்குழுவினர் மேற்கொண்டனர். இதையடுத்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் இணையும் விருப்பத்தை சமூக வலைதளம் மூலம் சிம்பு வெளிப்படுத்தினார். இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு லூப் தொடரும் என்று பதிலளித்திருந்தார்.
தளபதி 68 படத்துடன் இணையும் மாநாடு?: இதையொட்டி தளபதி 68 படத்துடன் மாநாடு படம் இணையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தளபதி 68 படத்தில் மாஸ் நடிகர்களின் கூட்டணி இணைந்துள்ளது. பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஸ்நேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலரும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளனர். மேலும் 80, 90களின் பேவரிட் நாயகன் மோகன் படத்தில் வில்லனாக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் புத்தாண்டையொட்டி ஜனவரி 1ம் தேதி வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விஜய்யுடன் இணைந்த இவானா: இந்நிலையில் லவ் டுடே படத்தின் நாயகி இவானா இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் விஜய்யின் தங்கையாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் இவர்கள் இருவரின் காட்சி அமைப்புகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனென்றால், டைம் டிராவலை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











