அந்த மனசுதான் சார் கடவுள். மிரட்டும் கொரோனா.. ஊரடங்கால் தவிக்கும் மக்கள்.. உணவு அளித்த பிரபல நடிகை!

சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கும் பிரபல நடிகைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ். 2009ஆம் ஆண்டு வெளியான அலாதீன் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஜாக்குலின். அடுத்த ஆண்டு வரை பல படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இரண்டாவது அலை

இரண்டாவது அலை

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் உணவு வழங்கி உதவி செய்து வருகிறார் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ். கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.

முழு ஊரடங்கு..

முழு ஊரடங்கு..

இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாநில அரசுகளும் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு என கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

பாலிவுட் பிரபலங்கள் உதவி

பாலிவுட் பிரபலங்கள் உதவி

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தினக்கூலியை நம்பியுள்ள தொழிலாளர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஏழை மக்களுக்கு உதவும் வகையில் பாலிவுட் பிரபலங்கள் ஏற்கனவே மளிகைப் பொருட்கள், நிதியுதவி மற்றும் உணவு போன்றவற்றை அளித்து வருகின்றனர்.

ஏழை மக்களுக்கு உணவு

ஏழை மக்களுக்கு உணவு

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகை ஜாக்குலின் தனது அறக்கட்டளை மூலம் உணவு வழங்கினார். மும்பையில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Recommended Video

22 உயிர்களைக் காப்பாற்றிய Sonu Sood | Tamil Filmibeat
பாக்கியமாக நினைக்கிறேன்

பாக்கியமாக நினைக்கிறேன்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாக்குலின், பசித்தவர்களுக்கு உணவளிப்பதன் மூலம் அமைதி ஆரம்பிக்கிறது என்று அன்னை தெரசா கூறினார். அதன்படி இந்த கடினமான காலத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்வதை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X