கோவிட் -19 முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜனனி
சென்னை : இந்திய அளவில் அனைவரும் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர்.
Recommended Video
திரை மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும் தங்களது தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர்.
இதன் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் இணைத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகை ஜனனி தனது கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுள்ளார்.

தொடர் லாக்-டவுன்கள்
கொரோனா வைரஸ் இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ள இரண்டாவது அலை மிகவும் மோசமான விளைவுகளை தந்துள்ளது. உயிரிழப்புகளும் அது தந்த வலிகளும் சொல்லி மாளாது. இந்நிலையில் இதற்கென மத்திய, மாநில அரசுகள் தொடர் லாக்டவுன்களை அறிவித்து வருகின்றன.

அதிகரித்துள்ள விழிப்புணர்வு
இதையடுத்து கொரோனாவின் தாக்கம் தற்போது மட்டு பட்டுள்ளது. இது ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை அடுத்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தாமாகவே முன்வந்து கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்கின்றனர்.

புகைப்படங்கள் பகிர்வு
ஆயினும் திரை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் தங்களது தடுப்பூசிகளின் முதல் மற்றும் இரண்டாம் டோசை போட்டுக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தங்களது புகைப்படங்களை சமூக தளங்களில் பதிவிடுவதன்மூலம் மற்றவர்களையும் போட தூண்டி வருகின்றனர்.

நடிகை ஜனனி தடுப்பூசி
இந்நிலையில் தற்போது நடிகை ஜனனி தனது கொரோனாவின் தடுப்பூசி முதல் டோசை போட்டுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படமாக அவர் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து நடிகர்கள் மற்றும் நடிகைகள் கொரோனா தடுப்பூசிகளை போட்டு வருவதுடன் விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு வருவது பாராட்டத்தக்கது.


Click it and Unblock the Notifications











