நாங்களும் போவோம்ல.. மாலத்தீவில் சில்லிங் செய்யும் பிக்பாஸ் பிரபலம்.. திணறடிக்கும் போட்டோஸ்!
சென்னை: பிக்பாஸ் பிரபலம் ஒருவர் மாலத்தீவில் ஓய்வை கழித்து வரும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருதிரு துருதுரு, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தவர் நடிகை ஜனனி ஐயர்.
பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் பெரும் பிரபலமானார். தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ஜனனி ஐயர்.

மாலத்தீவில் சில்லிங்..
தற்போது தொல்லைக்காட்சி, வேஷம், கசடதபற, பஹீரா, யாக்கை திரி, முன்னறிவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜனனி ஐயர். தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நடிகைகள் பலரும் மாலத்தீவில் சில் செய்து வருகின்றனர்.
Recommended Video

மாலத்தீவில் ஜனனி அய்யர்
அந்த வகையில் தற்போது நடிகை ஜனனி ஐயரும் கோடையை சமாளிக்கும் வகையில் மாலத்தீவில் சில் செய்து வருகிறார். மாலத்தீவு பீச் ஹவுஸில் நடிகை ஜனனி ஐயர் குதூகலமாய் இருக்கும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.
மாடர்ன் உடையில்..
விதவிதமான உடையில் நடிகை ஜனனி ஐயர் மாலத்தீவில் நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது. தொடை தெரிய மாடர்ன் உடையில் ஜனனி ஐயர் நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் இணையத்தை திணறடித்து வருகிறது.
ஸ்வீட் வாய்ஸ்..
இதேபோல் மாலத்தீவு கடலில் ஜாலியாக நடந்தப்படி சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலையும் பாடியுள்ளார் ஜனனி ஐயர். இதனை பார்த்த நெட்டிசன்கள், ஸ்வீட் வாய்ஸ் என அவரது குரலை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











