மீண்டும் இணையும் தெகிடி கூட்டணி.. ஜனனி கையில் 3

சென்னை : ஜனனி ஐயரை நமக்கு அவன் இவன் படத்தில் இருந்தே தெரியும். அட காவக்கார கிளியே முட்டைக்கண்ணு முழியே என்ற பாடலுக்கு ஏற்றவாறு தனது துரு துரு பேச்சு முட்டை கண்ணால் தனது முதல் படத்தியே அனைவரையும் கவர்ந்தவர் ஜனனி ஐயர்.

அவன் இவன் படத்திற்கு முன் சில படங்களிலும் , விளம்பரங்களிலும் நடித்திருந்தாலும், அந்த படத்தில் சிரிப்பு போலீசா நடித்து சிரிக்க வைத்ததுடன் அனைவருக்கும் தெரியும் படி ஆனார். அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது தெகிடி அந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Actress Janani Iyer has committed three movies in Tamil

மளையாளத்தில் இதுவரை 7த் டே , மோசியிலே குத்திய மீனுகள் ,கூத்தாரா,இது தான்டா போலீஸ் ,மச்சு கா போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் அதே கண்கள், முப்பரிமானம்,பலூன், விதி மதி உல்டா ,தர்மபிரபு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

அதன் பிறகு தான் அவருக்கு பிக்பாஸ் சீசன் 2ல் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில், அவரின் அமைதியான குணம் ரசிகர்களுக்கு பிடித்து இருந்தால், சீசன்2 இறுதி வரை நீடித்து, கோல்டன் டிக்கட் வாய்ப்பை பெற்றார்.

பிக்பாஸ்க்கு பிறகு ஜனனி மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். வேழம் படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கிறார். அதையடுத்து தொல்லை கட்சி என்ற படத்திலும், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் 'கசடதபற' படத்திலும் நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X