அந்த மாதிரி நடிச்சுருக்கேன்.. இதுவரை பார்க்காத ஜனனியை பார்ப்பீங்க..பஹீரா குறித்து மனம் திறந்த ஜனனி!

சென்னை: பஹீரா படத்தில் தன்னுடைய ரோல் என்ன என்பது குறித்து நடிகை ஜனனி ஐயர் மனம் திறந்துள்ளார்.

திருதிரு துருதுரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஜனனி ஐயர். இயக்குநர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் முதல் முறையாக லீடிங் ரோலில் நடித்தார்.

தொடர்ந்து தமிழ் மலையாளம் என நடித்து வரும் ஜனனி ஐயர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

5 ஹீரோயின்கள்

5 ஹீரோயின்கள்

தற்போது வேஷம், கசட தபற, பஹீரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜனனி ஐயர். இந்நிலையில் பஹீரா படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் 5 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

ஜனனி ஐயர் ஓபன்ஸ் அப்

ஜனனி ஐயர் ஓபன்ஸ் அப்

சைக்கோ கொலைக்காரரை போல நடித்துள்ளார் பிரபு தேவா. இந்நிலையில் பஹீரா படத்தில் நடித்துள்ள ஜனனி ஐயர் தனது கேரக்டர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது, பஹீரா படத்தில் தான் மாடர்ன் கேர்ளாக நடித்திருப்பதாக கூறியுள்ளார்.

முடியின் நிறம்..

முடியின் நிறம்..

அவர் பேசியிருப்பதாவது, ஆதிக் என்னிடம் பேசியபோது நான் படத்தில் வித்தியாசமாக இருப்பேன் என்று கூறினார். டீஸரை நீங்கள் பார்த்திருந்தால், படத்தில் எனக்கு முடியின் நிறம் வித்தியாசமாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். மாடர்ன் பெண்ணாக நடிக்கிறேன்.

இதுவரை பார்த்திராத..

இதுவரை பார்த்திராத..

நீங்கள் இதுவரை எந்த படத்திலும் பார்த்திராத ஒரு ஜனனியை இந்தப் படத்தில் நீங்கள் காண்பீர்கள். என்னுடைய கதாபாத்திரம் கவர்ச்சியாக இல்லை, ஆனால் மாடர்ன் பெண். நான் கதையைக் கேட்டவுடனேயே அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன்.

மர்ம திரில்லர்..

மர்ம திரில்லர்..

இது ஒரு மர்ம-திரில்லர் படம். நான் பிரபுதேவா சாரின் நிறைய படங்களைப் பார்த்திருக்கிறேன். அவரது நடனத்தை விரும்பினேன். அவர் சினிமாவில் நீண்ட காலமாக இருக்கிறார். நான் அவருடன் வேலை செய்கிறேன் என்று கேள்விப்பட்டபோது அது ஒரு பெரிய விஷயமாக இருந்தது.

பயமாக இருந்தது

பயமாக இருந்தது

அந்தப் படத்திற்கு நான் எஸ் என்று சொல்வது எனக்கு இன்னும் கூடுதல் விஷயம். நான் அவருடன் ஜோடியாக இருந்தபோது, நான் பதற்றமாக இருந்தேன். அவர் எப்படி செட்டில் இருப்பார் என்று எனக்குத் தெரியவில்லை. அவருடன் நடிக்க எனக்கு பயமாக இருந்தது, ஆனால் எல்லாம் நான் நினைத்ததற்கு முற்றிலும் நேர்மாறாக இருந்தது.

கற்றுக்கொள்ள வேண்டும்

கற்றுக்கொள்ள வேண்டும்

அவர் செட்டில் மிகவும் கூலாக இருந்தார், மேலும் செட்டில் அவருடன் இருப்பது வசதியாகவும் இருந்தது. சினிமாவில் இத்தனை உயரங்களை அடைந்தபின்னும் அவர் நடந்து கொள்ளும் விதம் எல்லோரும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. ஒட்டுமொத்தமாக, படத்தில் பணியாற்றுவது ஒரு வித்தியாசமான உணர்வு, இது வித்தியாசமானது என ஜனனி ஐயர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X