Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஜாதியைத் துறந்த ஜனனி.. தெறிக்கும் இணையதளம்.. குவியும் பாராட்டுகள்
சென்னை: நடிகை ஜனனி ஐயரால் இணையதளமே பரபரப்பாகியுள்ளது. அவர் போட்ட ஒரே ஒரு போஸ்ட்டில் டிவிட்டர் தளமே படு சூடாகியுள்ளது. பாராட்டுகளும் குவிந்து கொண்டுள்ளன.
அப்படி என்ன செய்து விட்டார் ஜனனி.. தனது பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பெயரை எடுத்து விட்டு வெறும் ஜனனிஸ்ரீ என்று மாற்றியுள்ளார். இதுதான் அவருக்கு பாராட்டுகள் குவிய காரணம்.
அந்த ரெண்டு குண்டு பல்பு ...செம பிரகாசம் ...ஷிவானியை பார்த்ததும் ஜிவ் ஆன ரசிகர்கள்!
ஆரம்பத்தில் நடிக்க வந்த புதிதிலிருந்தே அவரது பெயரை ஜனனி ஐயர் என்றுதான் எழுதி வந்தார், பேசி வந்தார். எல்லோரும் அப்படித்தான் அடையாளப்படுத்தியும் வந்தனர். ஆனால் தற்போது திடீரென தனது பெயரிலிருந்த ஜாதியை தூக்கி விட்டார் ஜனனி.
எனக்கு ஜாதி வேண்டாம்
டிவிட்டரில் இதுதொடர்பாக ஒரு டிவீட் போட்டு அத்தனை பேரையும் அசரடித்துள்ளார். மாற்றம் ஒன்றே மாறாதது.. என்றும் ஒற்றுமையுடன்.. ஜனனி என்று அவர் போட்டுள்ள இந்த போஸ்ட் பலரது பாராட்டுக்களைக் குவித்துள்ளது. அதேசமயம், பலர் குசும்புத்தனமாக கமெண்ட் பண்ணவும் தவறவில்லை.
பாராட்டும் ரசிகர்கள்
பிரபலங்கள் பலரும் ஜனனியின் இந்த ஜாதி துறப்பை வரவேற்றுப் பாராட்டியுள்ளனர். ரசிகர்களும் ஜனனியைப் பாராட்டி வருகின்றனர். ஆனால் ஏன் இந்த திடீர் ஜாதி துறப்பு என்பதை ஜனனி விளக்கவில்லை. மாறாக அதுகுறித்து கேட்போருக்கு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்து விட்டு கடந்து செல்கிறார்.
அதிகரிக்கும் ஜாதி வெறி
சமீப காலமாக ஜாதியை பச்சையாகச் சொல்லி அனுதாபம் தேடுவதும், கெத்து காட்டுவதும், பெருமை பேசிக் கொள்வதும் ஒரு பேஷனாக மாறி விட்டது. அது இந்த ஜாதி அந்த ஜாதி என்று இல்லை. பல ஜாதியினரும் இப்போதெல்லாம் ஜாதிப் பெருமை பேசுவதை கவுரவமாக கருத ஆரம்பித்து விட்டனர். மனசுக்குள் ஊறிக் கிடக்கும் ஜாதி வெறியை வெளிப்படையாகவே வெளிக்காட்டவும் ஆரம்பித்து விட்டனர்.
கவசமாகும் ஜாதி
அதிலும், ஏதாவது தப்பு செய்தால், எதிலாவது சிக்கிக் கொண்டால் உடனே ஜாதியை தூக்கிக் கொண்டு வந்து கவசமாக பயன்படுத்துவதற்காக பலர் வெட்கப்படுவதே இல்லை. ஜாதியை முன்னிறுத்தினால் தப்பி விடலாம் என்ற தப்புக் கணக்கே இது.
பாராட்டலாமே
இந்த சூழ்நிலையில் தனது பெயரிலிருந்து ஜாதியை தூக்கி வீசியிருக்கும் ஜனனியின் செயல் ஆச்சரியமானது அல்ல.. மாறாக பாராட்டப்பட வேண்டியது. நிறைய மலையாள நடிகர், நடிகைகள் இப்படித்தான் ஜாதிப் பெயருடன் சுற்றுகிறார்கள். அவர்களும் ஜனனி பாணியில் ஜாதியைத் தூக்கிப் போடுவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.