கம்பெனி சீக்ரெட்.. லியோ படம் குறித்து பளீச் பதில் சொன்ன பிக்பாஸ் ஜனனி!
சென்னை : நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தின் சூட்டிங் காஷ்மீரில் 60 நாட்கள் திட்டமிடப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சூட்டிங்கை தொடர்ந்து சென்னை திரும்பும் படக்குழுவினர் சில பேட்ச் வொர்க்குகளை முடித்து சூட்டிங்கை நிறைவு செய்யவுள்ளனர்.

விஜய்யின் லியோ படம்
நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் லியோ படம் விஜய்யின் 67வது படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் டைட்டில் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு தற்போது காஷ்மீரில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விறுவிறு லியோ சூட்டிங்
படத்தில் மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த், பிக்பாஸ் புகழ் ஜனனி உள்ளிட்டவர்களும் இணைந்துள்ள நிலையில், விஜய் கேங்ஸ்டன் வேடத்தில் நடிப்பதாகவும் படத்தில் அவருக்கு 6 வில்லன்கள் என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

போர்ஷனை நிறைவு செய்த மிஷ்கின்
இந்நிலையில், படத்தில் இயக்குநர் மிஷ்கின் தனது போர்ஷனை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளதாக அறிவித்துள்ளார். தன்னுடைய போர்ஷனை 500 பேர் கொண்ட குழுவினர் உதவி இயக்குநர்கள் உள்ளிட்டோர் இணைந்து முடித்துள்ளதாகவும் தன்னுடைய சிறப்பான சண்டைக் காட்சியை அன்பறிவு இணைந்து நடத்தி முடித்துள்ளதாகவும் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் ஜனனி
இதனிடையே இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ் ஜனனியும் இணைந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து கலந்துக் கொண்ட ஜனனி, தன்னுடைய க்யூட் நடவடிக்கையால் அனைவரையும் கவர்ந்தவர். இவருக்கென தனியாக ரசிகர்கள் ஆர்மியையும் உருவாக்கினர்.

தளபதி 67 படத்தில் ஜனனி
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி கொடுத்த பிரபலத்தால், ஜனனிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. எடுத்த எடுப்பிலேயே விஜய்யின் தளபதி 67 படத்திலும் நடிக்க ஜனனிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனிடையே அவரது சமீபத்திய பேட்டியில் படத்தில் விஜய்க்கு அவர் மகளாக நடிக்கிறாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

கம்பெனி சீக்ரெட் என ஜனனி பதில்
இதற்கு பதிலளித்த ஜனனி, அதெல்லாம் தற்போதைக்கு சொல்ல முடியாது என்றும் கம்பெனி சீக்ரெட் என்றும் பதிலளித்துள்ளார். தன்னுடைய க்யூட் சிரிப்பிற்கிடையில் ஜனனி இந்த பதிலை கொடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்த ஜனனி, இந்தப் படத்திலும் சிறப்பான என்ட்ரியை கொடுப்பார் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications











