Janhvi kapoor: காதல் முறிவு குறித்து பேசிய ஜான்வி.. நேர்மை இல்லை என உருக்கம்!

சென்னை: நடிகை ஜான்வி கபூர் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனிகபூரின் மகள். பாலிவுட்டில் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

தென்னிந்தியாவிலும் தற்போது இவர் தெலுங்குப்படத்தில் என்டிஆர் ஜோடியாக கமிட்டாகி நடித்து வருகிறார்.

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பதால் ஜான்வியின் ஒவ்வொரு அசைவும் அதிகமான கண்காணிப்பிற்கு உள்ளாகி வருகிறது.

Actress Janhvi kapoor opens up about her first love and its break up

காதல் முறிவு குறித்து பேசிய பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்: மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனிகபூரின் மகள் என்ற அடையாளத்துடன் பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். அழகு, கவர்ச்சி என இவர் மாஸ் காட்டி வருகிறார். வளர்ந்து வரும் நடிகையாக அதிகமான ரசிகர்களை கவர்ந்து வரும் ஜான்வி நடிப்பில் சமீபத்தில் கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

தென்னிந்திய படங்களிலும் கவனம் செலுத்தி வரும் ஜான்வி, அடுத்ததாக தெலுங்கில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜான்வி இணையவுள்ளதாக அடுத்தடுத்த தகவல்க வெளியான நிலையில், தற்போது ஜூனியர் என்டிஆருடன் தேவரா படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இந்நிலையில் அவர் தன்னுடைய நீண்டநாள் காதலருடன் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர், பாரம்பரிய உடையில் தன்னுடைய காதலர் ஷிகர் பஹாரியாவுடன் ஜோடியாக வந்திருந்தார். அவர் கையில் வைர மோதிரம் ஒன்றை பார்த்த ரசிகர்கள் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துவிட்டதாகவும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை அவர்களது குடும்பத்தினர் மேற்கொள்வார்கள் என்றும் கூறினர். பாலிவுட்டிலும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

Actress Janhvi kapoor opens up about her first love and its break up

இதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறார் ஜான்வி. இந்நிலையில் அவரது சமீபத்திய பேட்டியில் தன்னுடைய முதல் காதல் குறித்து பேசியுள்ளார். தான் பள்ளி படிக்கும் காலத்தில் ஒருவரை காதலித்ததாகவும் ஆனால் முதிர்ச்சி இல்லாத அந்த வயதில் காதல் ஏற்பட்டதால் சில நாட்களிலேயே இந்தக் காதல் முறிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இருவருமே காதலை நீட்டிப்பதற்காக தொடர்ந்து பொய் சொல்லி வந்ததாகவும் ஜான்வி கூறியுள்ளார்.

நேர்மை இல்லாத இந்தக் காதல் அதிக நாட்கள் நீடிக்கவில்லை என்றும் இந்தக் காதல் குறித்து தெரிந்த தன்னுடைய பெற்றோர், படிப்பில் கவனம் செலுத்த ஆலோசனை வழங்கியதாகவும் அதை தான் புரிந்துக் கொண்டு, தன்னுடைய இந்த முதல் காதலை முறித்துக் கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். பஹாரியாவுடனான காதல் குறித்து ஜான்வி பேசுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் குறைந்தபட்சம் அவர் தன்னுடைய முதல் காதல் குறித்தாவது மனம் திறந்துள்ளாரே என சமாதானப்படுத்திக் கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X