காஸ்மோபாலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை!
Recommended Video
மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் காஸ்மோபொலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்திருக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர். இவர் கடந்த ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி. இதனிடையே ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவியது.

அஞ்சாமல் கவர்ச்சி
இந்நிலையில் ஜான்வி கபூர் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். படங்களில் நடிப்பதற்கு முன்பே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜான்வி, கொஞ்சமும் அஞ்சாமல் கவர்ச்சி காட்டினார்.

ஓவர் கவர்ச்சி
சினிமாவுக்கு வந்தபிறகு கேட்கவா வேண்டும்.. கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சிக்கடையை விரித்து வருகிறார். தொடர்ந்து சினிமா பட வாய்ப்புகளை பெறவே ஜான்வி ஓவராக கவர்ச்சி காட்டுவதாக கூறப்படுகிறது.

அட்டையில் ஜான்வி
இந்நிலையில் காஸ்மோபாலிட்டன் அட்டைப்படத்தில் ஜான்வி கபூரின் படம் இடம்பெற்றுள்ளது. காஸ்மோபாலிட்டன் மேகஸினின் அக்டோபர் மாத எடிஷனில் சிவப்பு நிற டீப் நெக் கவுனில் ஃபிரி ஹேர் விட்டு பொம்மை போன்றுள்ளார் ஜான்வி கபூர்.

நடிக்கும் படங்கள்
மேலும் காஸ்மோபாலிட்டன் மேகஸினுக்கு இன்டர்வியூ கொடுத்துள்ள ஜான்வி ஊதா நிற ஸ்ட்ராப்லஸ் உடை அணிந்திருக்கிறார். அப்போது தான் நடித்து வரும் படங்கள் குறித்தும் தனது குடும்பம் குறித்தும் பேசியுள்ளார்.

சோகமாக இருந்தால்
தனது வேலைதான் தனக்கு சந்தோஷம் என்று கூறியுள்ள ஜான்வி, தான் எப்போது சோகமாக இருந்தால் என்னை மகிழ்ச்சியாக்கிக்கொள்ள கேமரா முன்பு வந்துவிடுவேன் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











