Actor Kamal haasan: எல்லாரையும் அப்படி இம்ப்ரஸ் செய்தார்.. கமலை புகழ்ந்த பிரபல நடிகை!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் பன்முகத்திறமைகளுடன் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளவர். முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் இணைந்து நடித்திருந்த விக்ரம் படம் அவருக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருந்த நிலையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இணைந்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் கமல்ஹாசனை வைத்து ஒரு பாடல் சூட்டிங்கை அடுத்ததாக ஷங்கர் திட்டமிட்டு வருகிறார்.
மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்படவுள்ள இந்தப் பாடல் காட்சி 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் வேலைகளில் பிசியாக உள்ள கமல்ஹாசன் விரைவில் இந்தப் பாடல் சூட்டிங்கிற்காக கால்ஷீட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் கோடை கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே மறுபுறம் படத்தின் டப்பிங் வேலைகளையும் ஷங்கர் நடத்தி வருகிறார். இந்தப் படத்தின் டப்பிங் வேலைகளில் கமல்ஹாசன் போர்ஷன்கள் இன்னமும் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் இந்தியன் 2. முன்னதாக வெளியான இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சேனாபதி மற்றும் சந்துரு என இருவேறு கேரக்டர்களில் நடிகர் கமல்ஹாசன் நடித்திருந்தார். ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் உருவாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக இந்தப் படம் மாறியது. படத்தில் கமலுடன் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல ஆண்டுகள் இடைவெளியில் கடந்த 2017ம் ஆண்டில் மீண்டும் இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு வெளியானது.
இந்தியன் 2 படம்: இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி விறுவிறுப்பாக நடந்த நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. இதையடுத்து முடங்கிய இந்தப் படத்தை கடந்த ஆண்டில் மீண்டும் தூசித்தட்டி எடுத்தது படக்குழு. இதற்கு முக்கியமான காரணமாக கமல்ஹாசனும அவரது விக்ரம் படத்தின் வெற்றியும் அமைந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. படம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என உருவாகியுள்ள நிலையில் இந்த ஆண்டிலேயே இந்த இரு படங்களும் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணி: தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் இணைந்து நடித்து வருகிறார் கமல்ஹாசன். தற்போது நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காகவும் இயங்கி வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசன் குறித்த பலரின் பாராட்டுக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகை ஜெயசுதா நடிகர் கமல்ஹாசன் குறித்து பேசியுள்ள இன்டர்வியூவின் வீடியோ தற்போது ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த காலகட்டத்தில் க்யூட்டா ஒரு சின்ன பையன் எவ்வளவு அழகா டான்ஸ் ஆடுகிறான் நடிக்கிறான் என அனைவரும் ஆச்சர்யபட்டதாக அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

கமலை பாராட்டிய ஜெயசுதா: அவர் மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசமாக தன்னை வெளிப்படுத்தியதாகவும் ஜெயசுதா அந்த பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இதேபோல நடிகை ஜெயசுதாவும் தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சரத்குமார் ஜோடியாக அவர் நடித்திருந்தார். படத்தில் சென்டிமெண்ட் காட்சிகளில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார்.


Click it and Unblock the Notifications











