ரொம்ப நாள் ப்ளான் இது.. ரஜினி குறித்து மனம் திறந்த சீனியர் நடிகை
சென்னை: லால் சலாம் படம் குறித்தும், நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் சீனியர் நடிகை ஜீவிதா ராஜசேகர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்களுக்கு முன்பு திருமண உறவிலிருந்து வெளியே வந்தார். திருமண உறவிலிருந்து வெளியே வந்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் தனது சினிமா குறித்த பணிகளில் ஆர்வமாக கவனம் செலுத்திவருகிறார்.

3 மூலம் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் மூலம் இயக்குந்ராக அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

லால் சலாம் இயக்கும் ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக லால் சலாம் என்ற படத்தை இயக்கிவருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஷுட்டிங் திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதற்கிடையே படத்தில் கமிட்டான விஷ்ணு விஷால் படத்திலிருந்து விலகிவிட்டார் என கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

லால் சலாமில் கமிட்டான ரஜினிகாந்த்
லால் சலாம் படத்தின் ஹைலைட்டாக ரஜினிகாந்த் இருக்கிறார். இந்தப் படத்தில் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். கிட்டத்தட்ட 45லிருந்து 50 நிமிடங்கள்வரை ரஜினி படத்தில் தோன்றுவார் எனவும், அவருக்குரிய கதாபாத்திரத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பார்த்து பார்த்து வடிவமைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிக்கு தங்கையாக ஜீவிதா ராஜசேகர்
இந்நிலையில் சலாம் படத்தில் நடிகை ஜீவிதா ராஜசேகர் நடிக்கவிருக்கிறார். இவர் 80களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். லால் சலாம் படத்தில் நடிப்பது குறித்து பேசிய ஜீவிதா, "மார்ச் 7ஆம் தேதி லால் சலாம் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவிருக்கிறேன். எனக்கான காட்சிகள் திருவண்ணாமலையில் படமாக்கப்படவிருக்கின்றன. ரஜினியுடன் எனக்கு நிறைய காட்சிகள் இருக்கின்றன. ரஜினிக்கு தங்கை மாதிரியான கதாபாத்திரம்தான். ஆனால் விளக்கமாக சொல்ல முடியாது.

ஓகே சொல்ல நேரம் ஆனது
இணைந்து பணியாற்ற வேண்டும் என நீண்ட நாள்களாக ப்ளான் இருந்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எனக்கு நல்ல தோழி. அவருடன் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேஎன். இந்தப் படத்திற்கு ஓகே சொல்ல எனக்கு நீண்ட நேரம் ஆனது. பல ஆண்டுகளாக மக்கள் என்னை பார்க்காததால் புதிதாக இருக்கும் என ஐஸ்வர்யாதான் வலியுறுத்தினார். நான் ரஜினியுடன் இதுவரை நடித்ததில்லை. அது இதன் மூலம் நிறைவடைவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











