கில்லி ரீ ரிலீஸ்.. அரிசி மூட்டைனு பெயர் வைச்சதே விஜய் தான்.. தங்கையான நடித்தவர் பேட்டி!

சென்னை: 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா நடித்த கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக சக்கைப்போடு போட்டு, யாருமே எதிர்பார்க்கலாத அளவிற்கு வசூலை அள்ளி வருகிறது. இப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த ஜெனிபர் கில்லி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

ஸ்ரீ சூரிய மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தரணி இயக்கத்தில் 2004 ஆண்டு ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இதில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், , நாகேந்திர பிரசாத், பொன்னம்பலம், பாண்டு, வினோத் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, மயில்சாமி என பலர் நடித்திருந்தனர். விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இத்திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

Actress Jennifer opens up about acting in Vijay s film Ghilli

கில்லி ரீ ரிலீஸ் : இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கிட்டத்தட்ட 600 தியேட்டர்களில் கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கும் நிலையில் கில்லி ரீ ரிலீஸ் படத்தை சர்வதேச அளவில் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள். இப்படத்தை டிவியில் மட்டுமே பார்த்து வந்த, இன்றைய 2கே கிட்ஸ்கள் ரீ ரிலீஸான படத்தை தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். இப்படம் முதல் நாளில் மட்டுமே படம் உலகம் முழுவதும் ரூ. 7 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது.

நடிகை ஜெனிபர்: குடும்பம், காதல், சென்டிமெண்ட் என அனைத்து கலந்த கலவையாக இருக்கும் இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் அப்படியே பதிந்து விட்டது. அதில் குறிப்பாக விஜய்யின் தங்கையாக வரும் ஜெனிபர், புவனா என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்து இருப்பார்கள். இவர்கள் இருவரும் வரும் காட்சியில் நகைச்சுவை இருந்தாலும், உணர்வபூர்வமாக இருக்கும். தற்போது கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அரிசி மூட்டை: அதில், கில்லி படப்பிடிப்பின் போது எப்போதும், அவர் பக்கத்துலேயே உட்கார சொல்லி, டேய்...பதில சொல்லுடா என் டைலாக்கை சொல்ல சொல்லுவார். அந்த வசனம் அவருக்கு ரொம்ப பிடிக்கும், அதே போல, எனக்கு அரிசி மூட்டனு பெயர் வைத்ததே தளபதி விஜய் தான். என்ன மூட்டனு அவர் கூப்பிட்டு செட்டில் இருந்த அனைவரும் அப்படித்தான் கூப்பிட்டாங்க. இப்பக்கூட என்ன சிலர் அரிசி மூட்டனு தான் சொல்லுவாங்க என்றார்.

Actress Jennifer opens up about acting in Vijay s film Ghilli

விஜய்யின் தங்கை: கில்லி படத்தில் நடித்த ஜெனிபருக்கு வளர்ந்து ஹீரோயினாக நடிக்கும் ஆசை உள்ளது. ஆனால் அவர் வளர்ந்தும் கூட அனைவரும் அவரை விஜய்யின் தங்கச்சியாகவே பார்க்கின்றனர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஜெனிபர் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் natures joy என்ற பெயரில் கெமிக்கல் ஃப்ரீ பிராடெக்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். முதலில் அவர் அதை உபயோகித்து டெஸ்ட் செய்து பார்த்த பிறகே அதை மற்றவர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். ஒவ்வொருவரின் ஸ்கின் டைப் தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றாற் போல் தயாரித்து வருகிறார். சோப் மேக்கிங் பயிற்சிகளை கூட வீட்டில் இருந்த படியே கற்று கொடுத்து வருகிறாராம் ஜெனிபர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X