திடீர் உடல் நலக்குறைவு.. பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர் காலமானார்..!

By

சென்னை: பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ், காலமானார்.

Recommended Video

பிரபல நடிகை Jayachithra Ganesh வீட்டில் நிகழ்ந்த இழப்பு | Amresh Ganesh

பிரபல நடிகை ஜெயசித்ரா, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். 70 மற்றும் 80- களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர்.

Actress Jeyachitras husband Ganesh passed away

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் அறிமுகமான இவருக்கு, கே.பாலசந்தரின் அரங்கேற்றம் படம் சிறந்த அடையாளமாக அமைந்தது. பிறகு கமல்ஹாசனின் சொல்லத்தான் நினைக்கிறேன், பணத்துக்காக, பட்டாம்பூச்சி, தேன் சிந்துதே வானம், இளமை ஊஞ்சலாடுகிறது உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர், கடந்த 1983 ஆம் ஆண்டு கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணேஷ், திருச்சியில் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவர் உடல் திருச்சியில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. போயஸ் கார்டனில் உள்ள அவர் வீட்டில், அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

கணேஷின் மறைவை அடுத்து திரையுலகினரும் நெருக்கமானவர்களும் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர். இவர்கள் மகன் அம்ரேஷ் கணேஷ், இசை அமைப்பாளராக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X