என்னுடன் இப்போது என் அம்மா இல்லை என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்.. தவிக்கும் வாரிசு நடிகை!
சென்னை: தன்னுடன் தற்போது தனது அம்மா இல்லை என்பதை ஒவ்வொரு நொடியும் உணருவதாக நடிகை ஜான்வி கபூர் உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து கரன் ஜோஹரின் கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து குன்ஜன் சக்ஸேனா, ரூஹி அஃப்ஸானா மற்றும் தோஸ்தானா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மாரடைப்பால் மரணம்
இதில் குன்ஜன் சக்ஸேனா, ரூஹி அஃப்ஸானா ஆகிய படங்களின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜான்வி கபூரின் தாயான ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது குளியலறையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
மிஸ் செய்கிறேன்
இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கடந்த மாதம் 24ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. அப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாயை கட்டிப்பிடித்தப்படி எடுத்தப் போட்டோவை ஷேர் செய்திருந்தார் ஜான்வி. மேலும் ஒவ்வொரு நாளும் உன்னை மிஸ் செய்கிறேன் என்றும் பதிவிட்டிருந்தார்.

அம்மா இல்லை
அவரது இந்த பதிவு பலரையும் கலங்க செய்தது. பிரபலங்கள் பலரும் அவரது போஸ்ட்டுக்கு ரியாக்ட் செய்தனர். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜான்வி கபூர் தனது தாயின் மரணம் குறித்து மிகவும் உருக்கமாக பேசியிருக்கிறார். அதாவது படப்பிடிப்பு, சுற்றுலா, ஃபிரன்ட்ஸுடன் ஊர் சுற்றுவது என நாட்கள் வேகமாக நகர்ந்தாலும், என்னுடன் இப்போது அம்மா இல்லை என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்.

போனி கபூர்
அவரது நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன் என உருக்கமாக பேசியிருக்கிறார் ஜான்வி கபூர். நடிகை ஸ்ரீதேவி பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை 1996ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஜான்வி, குஷி ஆகிய இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானார். ஸ்ரீதேவியின் திடீர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











