"இதக்கூடவா கவனிக்காம டிரஸ் போடுவீங்க"... மயிலு மகளை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. பாவம்ங்க ஜான்வி!

விலை அட்டையுடன் துப்பட்டா அணிந்து வந்த நடிகை ஜான்வி கபூரை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

Recommended Video

Actress jhanvi kapoor wearing dupatta with price tag

மும்பை: நடிகை ஜான்வி கபூர் நெட்டிசன்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி. இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

Actress Jhanvi Kapoor trolled for wearing dupatta with price tag

இந்திய விமானப்படையின் முதல் பெண் விமான போர் வீராங்கனை கஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை வரலாற்று படமான 'தி கார்கில் கேர்ல்' படத்தில் ஜான்வி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரியங்கா சோப்ரா, அபிஷேக் பச்சன், ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற தோஸ்தானா படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஜான்வி நடிக்க உள்ளார்.

இவை தவிர, ராஜ்குமார் ராவ் இயக்குனர் ஹாரர் படமான ரூஹி அப்சா உள்ளிட்ட மேலும் சில படங்களில் ஜான்வி நடித்து வருகிறார். தமிழில் அவர் விரைவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விலை அட்டையை நீக்காமல் துப்பட்டா அணிந்து வந்ததற்காக ஜான்வியை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். இதுதொடர்பாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் ஒரு படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏறி செல்கிறார். அவர் அணிந்திருக்கும் துப்பட்டாவின் நுனியில் விலை அட்டை கிழிக்கப்படாமல் இருக்கிறது.

இதை கவனித்த நெட்டிசன்கள், 'பிரைஸ் டேக்கை கூட கிழிக்காமல் வெளியில் செல்லும் அளவுக்கு அப்படி என்ன அவசரம்' என கிண்டல் செய்துள்ளனர். மேலும் காரில் ஏறும் ஜான்கி டேஷ் போர்டின் மீது தூக்கி காலை வைத்திருக்கிறார். அதற்காகவும் நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.

ஜான்வி இப்படி நெட்டிசன்களிடம் சிக்குவது முதல்முறையல்ல. ஏற்கனவே பலமுறை இப்படி டிரால் செய்யப்பட்டிருக்கிறார். அப்போதெல்லாம் அரைக்குறை ஆடையில் வந்து சிக்கினார். ஆனால் இப்போது சுடிதார் அணிந்து வந்த போதிலும், விலை அட்டையை கிழிக்க மறந்து சிக்கிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X