சாவியை பறித்துக்கொண்டு டிவி நடிகையை தாக்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்! போலீஸில் புகார்!
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடிகை ஜுகி சென் குப்தாவின் காருக்கு அதிக பெட்ரோலை நிரப்பிவிட்டு தகராறு செய்த பெட்ரோல் பங்கு ஊழியர்கள் அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் தெற்கு கொல்கத்தாவில் கஸ்பா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு டிவி நடிகை ஜுகி சென் குப்தா தனது பெற்றோருடன் காருக்கு பெட்ரோல் நிரப்ப சென்றார்.
அப்போது ஜுகி கேட்டதை விட அதிகமாக அவரது காரில் பெட்ரோல் நிரப்பியதாக தெரிகிறது. இதனால் பெட்ரோல் பங்கு ஊழியர்களுக்கும் நடிகையின் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தந்தை மீது தாக்குதல்
தான் கேட்டதை விட அதிகமாக பெட்ரோல் போட்டதால் பணம் கொடுக்க முடியாது முரண்டு பிடித்துள்ளார் ஜூகியின் தந்தை. இதனால் ஆத்திரமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியா்கள் ஜூகியின் தந்தையை கடுமையாக தாக்கியுள்ளனர்.

நடிகை மீது தாக்குதல்
இதனை தடுக்க சென்ற நடிகை மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் பெட்ரோல் பங்கு ஊழியர்கள். மேலும் பணம் கொடுக்கவில்லை என நடிகையின் வாகன சாவியை பறித்து கொண்டனர்.

சிசிடிவி காட்சிகள்
இதைத்தொடர்ந்து ஜூகியின் குடும்பத்தினா் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை தொடா்பு கொண்டனா். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரபரப்பு
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிகிறது. நடிகையை பெட்ரோல் பங்கு ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் நடிகையை தாக்கியதை அங்கிருந்தவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.


Click it and Unblock the Notifications











