பாவாடையை பறக்க விட்டு.. வேற லெவலில் வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் ஜூலி.. மிரளும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் ஜூலி பாவாடையை பறக்க விட்டு ஷேர் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு ரைமிங்காக முழக்கம் போட்டதால் பிரபலமானார் ஜூலி.
இதனை தொடர்ந்து விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

வெளியேற்றம்
இதில் ஓவியாவை கார்னர் செய்தது, பொய் பேசியது உள்ளிட்ட காரணங்களால் ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளானார் ஜூலி. இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஜூலி.

அதே வேலை
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜூலிக்கு தொடர்ந்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில படங்களில் நடித்து நடிகையாகிவிட்டார் ஜூலி. சமூக வலைதளங்களில் எப்போதும் வீடியோ வெளியிடுவது, போட்டோ ஷேர் செய்வது என இருந்து வருகிறார்.

டப்ஸ் மேஷ்
விதவிதமான போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வரும் ஜூலி அவ்வப்போது தனது ஆண் நண்பருடன் எடுக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். மேலும் சினிமா பாடல்களுக்கு டப்ஸ் மேஷ் செய்தும் திணறவிடுகிறார்.

பறக்கும் பாவாடை..
அந்த வகையில் தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம் பெற்ற அன்பே வா பாடலின் ரங்கோ ரங்கோலி என்ற வரிகளுக்கு ஆடியுள்ளார் ஜூலி. பிங்க் கலர் லாங் கவுன் அணிந்துள்ள ஜூலி அதனை பறக்க விட்டு மிரள விட்டுள்ளார்.
அடங்கவே மாட்டீங்களா
ஜூலியின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நாளுக்கு நாள் அழக கூடிக்கொண்டே போகிறதே என ஜொள்ளுவிட்டுள்ளனர். அதே நேரத்தில் இன்னும் சில நெட்டிசன்கள் நீங்க அடங்கவே மாட்டிங்களா என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











